ஒரு பெயர்ச்சொல்லுடன் அதனுடைய உடைமைப் பொருளில் வரும் மற்றொரு பெயர்ச்சொல்லைச் சேர்க்கும் பொழுது இன் என்னும் சாரியை இல்லாமலும் இருக்கலாம். உமைமகன் என்பது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும் என்றவாறு. |
இச்சாரியை பெற்று உமையின் மகன் எனவும் வரலாமாதலின் உரையில் அவ்வாறு கூறப்பட்டது. உமைக்கு மகன் என்னும் உறவுமுறையை இந்நூலாசிரியர் பேச்சு வழக்கை நோக்கி உடைமைப் பொருளாகக் கொள்கிறார். ஆனால், “கொடை, பகை, நேர்ச்சி, தகவு, அது வாதல், பொருட்டு, முறை ஆதியின் இதற்கு இது எனல்”1 நான்காம் வேற்றுமைப் பொருள் என்பதே தமிழ் இலக்கண மரபாகும். (274) |
110. | ஆல்எனல் ஆதலின் எனும்பொருள் ஆதலும் | | ஏல்எனல் என்றால் என்னத் திரிதலும் | | கொல்எனல் ஐயக் குறியும் ஆதலும் | | தேடுபு என்கை தேடிஎன்று ஒளிர்தலும் | | இனத்தால் பன்மையில் ஒருமைவந்து எய்தலும் | | அன்னசொல் திரிவுஎலாம் அருந்தமிழ்ப் புலவோர் | | மரபால் தேறிடல் வழக்குஎனத் தகுமே. |
|
ஆல் ஆதலின் என்ற பொருளில் வருதலும், ஏல் எனற்பாலது என்றால் என்று திரிதலும், கொல் என்னும் இடைச் சொல் ஐயப்பொருளில் வருதலும், தேடுபு என்ற சொல் தேடி என்ற எச்சமாதலும், இனத்தாற் பன்மையாகிய பொருள் ஒருமை முடிபைப் பெறுதலும் போன்ற சொல்திரிவுகள் அனைத்தும் புலவர்களின் வழக்காற்றினால் அறிந்து தெளிய வேண்டியனவாகும் என்றவாறு. |
வந்தது ஆதலின் பார்த்தேன் என இருக்க வேண்டியது வந்ததால் பார்த்தேன் என வழங்கப்படுகிறது. அவ்வாறே வந்தானேல் என்பது வந்தானென்றால் எனப்படுகிறது. |
கொல் என்பது வெறும் அசைச் சொல்லாக மட்டும் நில்லாமல் “அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை |
|