பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்187
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு”1 என்புழிப்போல ஐயப்பொருளிலும் வருகிறது. இந்நூல் 227 ஆம் நூற்பாவில் கொல் அசையாக வருதலை மட்டும் குறிப்பிட்டார். எனவே இங்கு ஐயக்குறியும் என எச்சஉம்மை கொடுத்தார்.
இவர் விகுதிகளைக் கூறும் போது (இந்நூல் 226) பு என்னும் வினையெச்ச விகுதியைக் கூறவில்லை. செய்பு என்னும் வாய்பாடாய் வந்த தேடுபு என்ற வினையெச்சம் வழக்கில் தேடி என வழங்கப்படுதல் இந்நூற்பாவில் கூறப்படுகிறது.
“கண்ணும் தோளும் முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக்கிளவி பன்மை கூறும் கடப்பாடு இலவே”2 என்னும் நூற்பாவால் கூறப்பட்டனவும் சேனை, ஊர் போன்ற பல பொருட்களின் கூட்டமும் அடங்க இனத்தால் பன்மை என்றார். சேனை வென்றது. ஊர் திரண்டது என ஒருமையில் வந்தாலும் பல வீரர்களின் தொகுதியும், பல மக்களின் கூட்டமும் ஆகிய பன்மையே கருத்தாம்.
“சொற்றொறும் இற்றுஇதன் பெற்றிஎன்று அனைத்தும் முற்ற மொழிகுறின் முடிவில ஆதலின் சொற்றவற்று இயலான் மற்றைய பிறவும் தெற்றென உணர்தல் தெள்ளியோர் திறனே”3 என்ற பவணந்தியார் கருத்தையே அவ்வாறு தெளிவதற்கு இலக்கிய மரபையே கருவியாகக் கொள்ள வேண்டும் என்னும் நெறியையும் காட்டி முடிக்கிறார் இவ்வாசிரியார்.
(275)
111.தல்ஆர் அல்அர் பாக்கு முதலிய
 விகுதியின் நிலைஎலாம் வெள்ளியங் கிரிநேர்
 பொதிய மால்வரைப் பூம்பொழிற் றென்றற்
 பரவுவார் மனத்துஓர் பால்கிடப் பனவே.
தல், ஆர், அல், அர், பாக்கு முதலிய விகுதிகளின் தன்மைகள் அனைத்தும் கயிலைக்கிணையான பொதியமலையின்