நாலடியார் எனலாகாது. உரைக்கப்பட்டவை எல்லாம் திருவாசகம் என்றால் பொருந்தாது. இவை போல்வன சிறப்பு வகையாற் பெயர் பெற்றவைகள். இத்தகைய பனுவல்கள் பெயர் முறையில் சிறப்புப் பெயர் பெற்ற மாந்தருக்கு இணையானவை என உவமை கூறித் தெளிவிக்கிறார். (531) |
133. | ஒன்றற்கு ஒருவன் உரைத்ததுஓர் பனுவலை | | வேறுமோர் புலவன் விளம்புதல் இழிவே. |
|
ஒரு பொருள் பற்றி ஒரு புலவன் முன்னமேயே ஒரு சிற்றிலக்கியத்தை இயற்றியிருந்தால், பின்னால் தோன்றிய வேறொருவன் அதே பொருள் பற்றி அதே பிரபந்தத்தை இயற்றுதல் சிறப்புடைய செயலன்று என்றவாறு. |
உதாரணமாகக் குமரகுருபரர் மதுரை மீனாட்சியம்மை மீது ஒரு பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். வேறொரு புலவர் அத்தலத்தின் அவ்விறைவி மீதே இன்னொரு பிள்ளைத்தமிழ் பாடலாகாது. பிற்காலப் புலவர் அவ்வம்மையைப் பாட விரும்பினால் வேறுவகையான பிரபந்தம்தான் பாடவேண்டும் என்கிறார். |
இக்கருத்து தல சம்பந்தப்பட்ட பிரபந்த வகைகளுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கொள்ளலாம். ஏனெனில் சைவ சமயாச்சாரியர் நால்வரைப் போற்றிப் பல பிள்ளைத்தமிழ்கள் உள்ளன. இவை ஒரு தலத்துக்கு மட்டும் உரியதாக அமையாமல் பொதுவாக அமைகின்றன. மேலும் தோத்திரப் பதிகங்களையும் இவ்விதியிலிருந்து விலக்கிவிட வேண்டும். ஏன் எனில் ஒருவரே ஒரு தலத்திற்குப் பல பதிகங்கள் அருளி இருப்பதைச் சைவத் திருமுறைகளில் காணலாம். இவ்வாசிரியரும் ஒரே தலத்தின் ஒரே மூர்த்திக்குப் பல பதிகங்கள் பாடியுள்ளார். எனவே தோத்திரங்களை இவ்விதிக்கு உட்படுத்தாமல் கலம் பகம், பிள்ளைத்தமிழ், உலா, கோவை போன்ற சிற்றிலக்கியங்களை மட்டுமே கொள்ள வேண்டும். (532) |