பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்511
107.அட்டாவ தானம் எமகண்டம் மற்றோன்
 கண்டதைப் பாடல் ஆதியில் கருதும்
 தவம்முடி வதன்முன் சருவவொண் ணாதே,
ஒரு புலவன் தன் அறிவு வன்மையை மட்டுமே பெரிதாக எண்ணித் தனக்கு இறையருள் முற்றிலும் எப்போதும் துணை செய்யும் என்னும் நிச்சயமான துணிவு ஏற்படுவதற்குமுன்னமேயே அட்டாவதானம், எமகண்டம், கண்டசுத்தி போன்ற ஆபத்தான துறைகளில் விளையாட்டாக ஈடுபடக் கூடாது என்றவாறு,
தவம் முடிவதன்முன் என்னும் சொற்றொடர் விரித்து உரைக்கப்பட்டது, ஒரே சமயத்தில் எட்டு வெவ்வேறு செயல்களில் ஒருவன் ஈடுபடுவது அட்டாவதானம் எனப்படும்.
“16 அடி நீள அகலம உள்ள குழி ஒன்று வெட்டி அக்குழியின் நான்கு மூலைகளிலும் இருப்புக்கம்பங்கள் நாட்டி அதன் மேல் நான்கு இருப்புச் சட்டங்கள் பரப்பி நடுவினும் சட்டமிட்டு நடுச்சட்டத்தில் உறிகட்டிக் குழியில் புளியந் தணலிட்டு இருப்புக் கொப்பரையில் அரக்கு, மெழுகு, குங்கிலியம் கந்தகம் சாம்பிராணி நிரப்பி அவை கொதித்திருக்கையில் யானையை பாகருடன் நான்கு மூலையில் நிறுத்திப் பின்புறத்தில் வளையத்திற் சங்கிலி கோத்து எட்டுக் கத்திகளை இடுப்பில் நாலும் கழுத்தில் நாலும் கட்டிக்கொண்டு வளையத்திற் பொருத்திச் சங்கிலிகளை யானைத் துதிக்கையிற் கொடுத்து வைத்துக் கொப்பரைக்கு நடுவாகத் தொங்கும் உறியில் புலவன் இருந்து பல வித்வான்கள் கொடுத்த சமுசையைப் பாடுவது, அவ்வகை பாடானாயின் யானையைத் தூண்ட யானை சங்கிலிகளை இழுக்க புலவன் உடல் அறுப்புண்டு கொதிக்கும் தீயில் விழுந்திறப்பன். இதுவே யமகண்டம்” என்பது அபிதான சிந்தாமணி, இவர் சற்று வேறுவிதமாகக் கூறுவார், அது “குன்ற நேர் மதவே ழத்தின் கோட்டினில் கூர்வாள் கட்டி இன்றமிழ்ப் புலவன் கண்டம் அதனிடை இலங்ச் சேர்த்து” “பலகைமேல் நிறுத்தித் தாளில் பருக்கை தோய் சிலம்பு பூட்டிக் குலவும் இராகம் தாளம் கோதிலா அபிநயங்கள் விலகுறாது ஆடச்சொல்லி வேழமீ திருந்து கொண்டு புலவர்பற் பலர்க்கும்