பக்கம் எண் :
 
புலமையிலக்கணம்512
(முன்தான் பூட்டிய விலங்கு நீத்தே) ஒவ்வொரு வரும்ஒவ்வோர் பாட்டு உரத்துடன் வினவ ஏவி”1 எனக் கூறப்படுகிறது,
எதிரில் உள்ளவரின் கருத்தில் அச்சமயத்தில் இடம்பெற்றுள்ள செய்தியை அவர் கூறாமல் தானே அறிந்துகொண்டு அதனையோ அல்லது அவ்வையத்தின் விடையையோ கவிதையாகக் கூறுவது கண்டசுத்தி எனப்படும்., இதனைக் கண்டசித்தி என்பாரும் உளர். இறையனார் தருமிக்காகப் பாடிய ‘கொங்குதேர் வாழ்க்கை’ கண்ட சுத்தியாகும் எனத் திருவிளையாடற்புராணம் கூறுகிறது.
ஆதி என்றதால் தசாவதானம், சோடசாவதானம், சதாவதானம் போன்ற அவதான வகைகளையும் மழை பொழியப்பாடுதல், ஒரு பொருள் பல துண்டுகளாகும்படிப் பாடுதல் போன்றனவற்றையும் கொள்க.
“நூலின் துணையிலும் நூறு பங்கு அதிகம் தெய்வத் துணை ஆம் செழுந்தமிழ்க் கவிக்கே”2 என முன்னரே கூறினார், அத் தெய்வத்துணை கைகூடுமுன் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டால் (இப் பிரிவின் முதல் நூற்பாவில் கூறியவாறு) தனக்குத் தவறு நேர்ந்துவிடும், தவறியல்பில், “எள்ளிடைப் புலமை இசையும் முன்னம் நெல்லிடை யாண்மை நிலவல் ஓர் தவறே”3 என்றதுவும் இதுபற்றியே,(749)
108.கல்லார் மகிழ்வுறக் கவித்திறல் காட்டலில்
 வல்லார் மகிழ்தரும் வாசகம் பயில்தல்
 எண்மடங்கு உயர்ச்சி எனத்தகும் தகுமே,
கல்வியறிவற்ற பாமரர்கள் மட்டும் மிகவும் சுவைத்துப் பாராட்டும்படியாகக் கவிதைகளை இயற்றும் புலமையைவிட அறிஞர்கள் போற்றுமாறு சாதாரண உரைநடையைக் கையாண்டு இலக்கியம் படைப்பவனின் ஆற்றல் பல மடங்கு உயர்வானது என்பது தேற்றம் என்றவாறு,