| அலைநீர்முடித்தவன்பி ராட்டிநீண்டமையைஅன்ன | | பகவன்நேர்வார் | | அடிசேரும்நட்புயர்ந்து ளார்க்குஎலாம்தமுள்ளம் உன்னி | | மகிழும்வாழ்வுஆம் | | உலைபாயல்கட்டும்வம்பர் வார்த்தைதாங்குகள்வர்இன்னல் | | அதனின்மாய்வுஆம் | | உலகுஏழும்மெச்சும்உம்பர் நாட்டும்ஓங்குதுய்யவண்மை | | தமிழதுஆமே. |
| முருகப்பெருமான் எல்லா மலைகளின்மீதும் குடிகொண்டு விளங்குபவர், வேலாயுதத்தைத் தாங்கியுள்ள தலைவர், வள்ளி நாயகியாரை அணைகின்ற புயங்களைப் பெற்ற அழகர், மயில் வடிவாகி வந்த சூரனை வாகனமாகச் செலுத்தி அடக்கி வெற்றி கொண்டதன் விளைவாக அயிராவத்ததால் வளர்க்கப்பெற்ற தெய்வயானையின் மணவாளர் ஆனவர். பன்னீர் இலையில் வைத்து அளிக்கப்படும் திருநீற்றுப் பிரசாதத்தை விழையும் மெய்யன்பர்களைத் தன் கருணையால் பெருமுயற்சியின்றி ஆட்கொள்ளுகின்ற இளமைப் பருவத்தை உடையவர். | இத்தகைய சிறப்புகளைப் பெற்ற அவர் அடியேனை ஆட்கொண்டு அறுவகை இலக்கணமாகிய இந்நூலைச் செய்விக்கும் திருவருள் இப்போது நன்கு விளக்கமாகி உள்ளது. இதனால் தலையில் கங்கையை அணிந்தவராகிய சிவபெருமான், அவர் தேவியாகிய உமையம்மை, நீலமேனி நெடியோன் ஆகிய திருமால் போன்ற அறுசமயத் தலைவர்களின் திருவடிகளை வணங்கி வாழும் அன்பர்கள் அனைவர்க்கும் எண்ணியவை யாவும் கைகூடி மகிழ்வளிக்கும். கேட்பாரை வருத்துகின்ற இயல்புடையனவாகிய பாய்ச்சீலை உடுத்தும் சமணர்களின் வார்த்தைகளாகிய இலக்கண நூல்களை மலைஇலக்காக நம்பிப் பின்பற்றும் கள்வர்கள் துன்புறுவர். தமிழ்மொழியின் தூய சிறப்பு இனிமேல் ஏழு உலகங்களிலும் சிறந்ததாகப் போற்றப்படும், அமரர் உலகிலும் நன்கு போற்றப்படும், | பாயல் கட்டும் வம்பர் உலைவார்த்தை எனவும் தமிழது துய்ய வண்மை உம்பர் நாட்டும் ஓங்குமாமே எனவும் இயைக்க, |
|
|