பக்கம் எண் :
 
சாத்துகவிகள்544
அஷ்டாவதானம்
பூவை. கலியாணசுந்தர முதலியார் அவர்கள்
இயற்றியது
போற்றுமின் ! புலவீர் ! போற்றுமின் புலவீர் !
  போற்றுமின் ! இந்நூற் புகழினைப் போற்றுமின் !
  ஏற்றரும் பெரியோர் இறும்பூது எய்தச்
  சாற்றிய இந்நூல் தன்மையைப் போற்றுமின் !
  முகத்தல் செய்யா முந்நீர் உண்ட
  அகத்திய னாரும் அருந்தமிழ்க் குரவனும்
  ஒல்காச் சொற்சுவை ஓங்கச் செய்த
  தொல்காப் பியன்ஆம் தூய்மை யாளனும்
  அறைந்த இலக்கணம் ஐவகை தம்முள்
  மறைந்தன குறைந்தன மாநிலத்து இந்நாட்கு
(10)
  இன்றி யமையாது இருக்க வேண்டுந
  ஒன்றிய அறிவால் ஊகித்து உணர்ந்தே
  உறும்இயல் பலவாய் உற்றசூத் திரத்தால்
  அறுவகை இலக்கணம் அருளிச்செய்தனன்;
  ஆழா அரிய அநேக விதிநிறீஇ
  ஏழாம் இலக்கணம் எனவும்ஒன்று இயம்பினன்;
  எல்லைஇல் மகிமை இனிதுஅங்கு எழூஉம்
  நெல்லைப் பதிஆம் நீள்படை வீட்டினன்;
  நீதிசேர் ஞானம் நிகழும் மனத்தினன்;
  பூதி நிறைந்து பொலியும் மேனியன்;
(20)
  புண்புழு ஆதியும் புண்படச் சகியான்;
  அன்பே உருவாய் அமைந்த பொற்பினன்;
  பண்அமை திருப்புகழ்ப் பாக்கள் தமக்கு
 வண்ணத் தியல்பு வகுத்த பெரியோன்;
  வேற்படைப் பெருமான் வியன்அருள் பெறீஇ
  நாற்கவிப் பாவலர் நடுக்கம் கொள்ளச்
  சிந்தையில் சிறிதும் கருதல் இன்றிச்
  சந்தக் கவிசொலும் சரபம் ஆனோன்;
  அறுமுகக் கடவுள் ஆறு முகம்என
  அறுவகைச் சமயமும் ஆதரித் திடுவோன்;
(30)