பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்545
அண்ணல் அபர அருண கிரிஎனா
  நண்ணி வாழும் நலம்பல உள்ளான்;
  தொண்ட னேனையும் சுதந்தரித்து ஆண்ட
  தண்ட பாணிஎன் சாமி தானே.
பிற்சேர்க்கை II
முதல் பதிப்பில்மட்டும் காணப்படும் சாத்துகவிகள்
சோழவந்தானூர் அருளானந்த சுவாமிகள் ஆதீனம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
அருளிச்செய்தன
விருத்தங்கள்
இருட்கடல்ஆழ்ந்து அயர்உயிர்கட்கு இறைவன்அறு
     வகைக்கரணம் ஈந்த தேபோல்
  பொருள் கடல்ஆர்ந் துள்ளஅறு வகைஇயலைப்
     புவிஉணரப் புனைதல் செய்தான்;
  அருட்கடல்ஆர்ந்து அம்புவியைச் சுகப்படுத்தும்
     பெருநினைவுஒன்று அகத்தில் பூண்ட
  தெருட்கடலாம் திருப்புகழோன் திருநெல்லைப்
     பதியில்வரும் சிறப்புஉள் ளோனே.
கூறுபடும் அகச்சமயக் குழப்பமொடு
     புறச்சமயக் குதர்க்கம் நீத்தோன்;
  ஊறுதவிர் பொதுத்திறம்தான் முழுப்புகழ்தோய்
     தனிக்கதிஎன்று உறுதி கொண்டோன்;
  வீறுஉதவு குகக்கடவுள் விளக்கமுழுது
     உணர்நிபுணன் விரும்பி னோர்க்குஎன்று
  ஆறுவகை இலக்கணநூல் அருளியதுஓர்
     வியப்போநல் அறிவுள் ளோரே.
(குறிப்பு: பிற்சேர்க்கை 1இல் உள்ள அகவலைஅடுத்து இவ்விரு விருத்தங்களும் முதல் பதிப்பில் இடம்பெற்றுள்ளன),