என்றெல்லாம் பின்னர்க் கூறி எழுத்தைப் பற்றி எத்துணை சொல்ல இயலுமோ அத்துணையும் முற்றக் கூறி முடித்தேன் அல்லேன்; நூற்பயிற்சிக்கு இன்றியமையாதனவற்றை மாத்திரம் கூறா நின்றேன் என்பார் ‘இயம்புவன் சிறிதே’ என்றார். இவரே பிறிதோரிடத்தில் இக்கருத்தே பற்றி, |
| “எழுத்தியல் தொகையில் ஏற்றம் நாடில் | | அவைபுணர் இயல்பே; அல்லவை யாவும் | | பிறர்வியப்பு அவாவிப் பெரிது வேழம்பர் | | ஆதியர் கற்கும் அணிச்சமர் போல்வ”.1 |
|
என்றமை காண்க. |
இனி எழுத்துகளின் வகை கூறப்படும் (1) |
2. | உயிர்என்று ஆய்தம் என்று ஒற்றுஎன்று உயிர்மெய்என்று | | அலகுஎன்று கூட்டுஎன்று அறுவகை எழுத்தும் | | அன்றிக் குறிப்புஎன்று அவைசில உளவே. |
|
இந்நூற்பா எழுத்துகளை ஆறுவகையாகவும் ஏழுவகையாகவும் பிரித்துரைக்கிறது. |
உயிரெழுத்து, ஆய்தஎழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் யெழுத்து, அலகெழுத்து, கூட்டெழுத்து என்னும் அறுவகையாகவும், இவற்றுடன் குறிப்பெழுத்து ஒன்றையுங்கூட்ட ஏழுவகையாகவும் எழுத்துகள் வகைப்படுத்தப்படும் என்றவாறு. |
தனித்தியங்கும் தலைமை பற்றி உயிர்எழுத்து முதலிலும், அவற்றொடு இணைத்து வழங்கப்படுதல் பற்றி ஆய்தம் அடுத்தும் கூறப்பட்டன. உயிரின் துணையின்றி உச்சரிக்கமுடியாத மெய்யெழுத்து மூன்றாவதாகவும், இவ்விருவகை எழுத்துகளின் புணர்ப்பாதலின் உயிர்மெய் அடுத்தும் இடம் பெற்றன. அலகெழுத்துகள் பெரும்பாலும் இயற்றமிழில் பயன்படாமல் கணிதத்திலே மட்டும் பயன்படுவதால் அவை பின்னர் வந்தன. கூட்டெழுத்துகள் தனி ஒலியற்ற வெறும் வரிவடிவேயாதலின் |
|