ஆறாவதாகக் கூறப்பட்டன. சிலவற்றைக் குறிக்க மட்டுமே பயன்படுவதாகவும், இலக்கிய ஆட்சியோ தனிஒலியோ அற்றதாகவும், பெரும்பயன்தராதனவாகவும் உள்ளமை கருதிக் குறிப்பெழுத்துகள் ஈற்றில் தள்ளப்பட்டன. இதுபற்றியே முற்கூறிய ஆறுவகையோடு இவையும் வழங்கப்படுகின்றன எனப் பிரித்துக் காட்டினார். |
தொல்காப்பியர் முதலிய அனைத்து இலக்கணிகளும் கொள்ளும் முதல் சார்பு என்னும் பிரிவை இந்நூலாசிரியர் கொள்ள வில்லை. எனினும் ஆய்தத்தை உயிருக்கும் மெய்க்கும் இடையே வைத்துக்கூறிய அதனானே இவர் வீரசோழியம், நேமிநாதம் ஆகிய இரண்டினையும் ஒட்டி முதல் எழுத்துகள் முப்பத்தொன்று என்னும் கொள்கையை உடையவர் எனலாம். |
“ஆயுத எழுத்து ஒன்று என்னாதவர்களும் ஐயும் ஒளவும் தோயும் மாத்திரை இரண்டாச் சொல்பவர்களும் போன்றுள்ள பேய் உணர்வினர் எல்லோரும்”1என்னும் இவர் வாக்கால் இஃது உறுதியாகிறது |
இவர் அலகு, கூட்டு, குறிப்பு எனும் மூவகை எழுத்துகளைப் பற்றிப் புதியனவாகக் கூறலால் எழக்கூடிய தடைகளை எண்ணி முன்னோர் நால்வகை எழுத்தே கொண்டமைக்குக் காரணம் அடுத்த சூத்திரத்தால் கூறுகிறார். (2) |
3. | இருநிலத்து யாம்உணர் எழுத்துஇனம் ஏழில் | | நால்வகை எழுத்தே நலிலும் மற்றைய | | மூவிதப் பொறிகளின் முதல்எனக் கருதி | | அவ்வாறு ஓத மவர்சிலர் உளரே. |
|
உலகியலின் அன்றாட வாழ்க்கையில் நாம் அறிந்து பயன்படுத்துவன ஆகிய ஏழ்வகை எழுத்துகளுள் உயிர், ஆய்தம், மெய், உயிர்மெய் என்னும் நான்கே அலகு, கூட்டு, குறிப்பு ஆகிய மற்ற மூவகை எழுத்துகளுக்கும் முதலாயமைந்த காரணத்தால் எழுத்துகளையே அந்நால்வகைய என்று சிலர் கூறியுள்ளனர் என்றவாறு, |
|