தாழிசை; ஆசிரிய நேர்த்துறை, ஆசிரிய இணைக் குறட்டுறை; ஆசிரிய நிலை
விருத்தம், ஆசிரிய மண்டில விருத்தம்; கலி ஒத்தாழிசை, கலித்தாழிசை,
கலித்துறை, கலி விருத்தம்; கலிநிலைத்துறை, கலி மண்டிலத் துறை,
கட்டளைக் கலித்துறை, கலி நிலை விருத்தம், கலி மண்டில விருத்தம், வஞ்சி
நிலைத் தாழிசை, வஞ்சி மண்டிலத் தாழிசை, வஞ்சி நிலைத்துறை, வஞ்சி
மண்டிலத்துறை, வஞ்சி நிலை விருத்தம், வஞ்சி மண்டில விருத்தம் என்னும்
விரியானும்;
செப்பல், அகவல், துள்ளல், தூங்கல், கொஞ்சல் என்னும்
தொகையானும்;
‘பாஅ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண்ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணமொடு ஆங்கவை என்ப அறிந்திசினோரே.’1
என்னும் வகையானும்;
குறில் அகவல் தூங்கிசை வண்ணம் முதலாகிய வண்ணம் நூறு என்னும்
விரியானும்; சுருங்கியும் விரிந்தும் கிடந்த தொன்னூல் யாப்புகளது துணிபு
நோக்கி, அரும்பொருட் பெருங்கேள்வி ஆசிரிய வசனங்களை
ஆலம்பனமாக அருங்கல அணி ஒருங்கு கோத்தாற் போலவும், அலை கடல்
கடைந்து அமுது கொண்டாற் போலவும் ஒருங்கு கோத்து ஒரு
கோவைப்படுத்து எல்லார்க்கும் உணர்வு புலன் கொள்ளு மாற்றால் யாப்பு
உணர்த்துதல் நுதலிற்று. இதனானே இது சார்பு நூல் என்பது முடிந்தது.
இனி, ‘இவ்வோத்து என் நுதலிற்றோ?’ எனின், அசைக்கு உறுப்பாம்
எழுத்துக்களது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று; அதனானே,
‘எழுத்தோத்து’ என்பதாயிற்று.
1. தொல். பொ. செய். சூ. 213 குறிப்பு. ஆலம்பனம் -பற்றுக்கோடு
|