பக்கம் எண் :
 

 பாயிரம்                                                9

 பல விகற்ப இன்னிசை வெண்பா, பல விகற்ப நேரிசை வெண்பா, ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா, ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா, இன்னியல் நேரிசை ஆசிரியப்பா, விரவியல் நேரிசை ஆசிரியப்பா, இன்னியல் இணைக்குறள் ஆசிரியப்பா, விரவியல் இணைக்குறள் ஆசிரியப்பா, இன்னியல் நிலை மண்டில ஆசிரியப்பா, விரவியல் நிலை மண்டில ஆசிரியப்பா, இன்னியல் அடிமறி மண்டில ஆசிரியப்பா, விரவியல் அடிமறி மண்டில ஆசிரியப்பா, வெள்ளைச் சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அகவற் சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா அளவியல் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, அளவழி அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, அளவியல் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, கலி வெண்பா, வெண்கலிப்பா, இயற்றரவு கொச்சகக் கலிப்பா, சுரிதகத்தரவு கொச்சகக் கலிப்பா, இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா, சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா, இயற்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, குறைச்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, இயற்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, குறைப்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, இயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, அயல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா; இன்னியற்குறளடி வஞ்சிப்பா, விரவியற்குறளடி வஞ்சிப்பா, இன்னியற்சிந்தடி வஞ்சிப்பா, விரவியற்சிந்தடி வஞ்சிப்பா, புறநிலை வாழ்த்துச் சமனிலை மருட்பா, புற நிலை வாழ்த்து வியனிலை மருட்பா, வாயுறை வாழ்த்துச் சமனிலை மருட்பா, வாயுறை வாழ்த்து வியனிலை மருட்பா, செவியறிவுறூஉச் சமனிலை மருட்பா, செவியறிவுறூஉ வியனிலை மருட்பா, கைக்கிளைச் சமனிலை மருட்பா, கைக்கிளை வியனிலை மருட்பா என்னும் விரியானும்;

     தாழிசை, துறை, விருத்தம் என்னும் தொகையானும்; வெண்டாழிசை, வெண்டுறை, வெளி விருத்தம்; ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம்; கலித் தாழிசை, கலித்துறை, கலி விருத்தம்; வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் என்னும் வகையானும்; வெண்செந்துறை, குறட்டாழிசை, வெள்ளொத்தாழிசை, வெண்டாழிசை; ஓரோலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை, வெளி விருத்தம், வெளி மண்டில விருத்தம்; ஆசிரிய ஒத்தாழிசை,ஆசிரியத்