இயைபு, இடைப்புணர் இயைபு, கடைக்கூழை இயைபு, கடை இயைபு, கடை இணை அளபெடை, பின் இணை அளபெடை, இடைப்புணர் அளபெடை, கடைக்கூழை அளபெடை, கடை அளபெடை எனவும்; அசைவிரளச் செந்தொடை, சீர்விரளச் செந்தொடை, இசைவிரளச் செந்தொடை, முற்று விரளச் செந்தொடை, குறையீற்று ஒரு பொருள் இரட்டை, குறையீற்றுப் பல பொருள் இரட்டை, நிறையீற்று ஒரு பொருள் இரட்டை, நிறையீற்று பல பொருள் இரட்டை, குறையீற்று முற்று இரட்டை, நிறையீற்று முற்று இரட்டை; மண்டில எழுத்து அந்தாதி, செந்நடை எழுத்து அந்தாதி, மண்டில அசை அந்தாதி, செந்நடை அசை அந்தாதி, மண்டிலச் சீர் அந்தாதி, செந்நடைச் சீர் அந்தாதி, மண்டில அடி அந்தாதி, செந்நடை அடி அந்தாதி, மண்டில மயக்கு அந்தாதி, செந்நடை மயக்கு அந்தாதி, மண்டில இடையீட்டு அந்தாதி, செந்நடை இடையீட்டு அந்தாதி என்னும் விரியானும்;
பாவினம் - தொகை, வகை, விரி
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்னும் தொகை யானும்; குறள் வெண்பா, சிந்தியல்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா; நேரிசை ஆசிரியப்பா, இணைக் குறள் ஆசிரியப்பா, நிலை மண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, வெண் கலிப்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா; குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா, புறநிலை வாழ்த்து மருட்பா, வாயுறை வாழ்த்து மருட்பா, செவியறிவுறுஉ மருட்பா, கைக்கிளை மருட்பா என்னும் வகையானும்; குறள் வெண்பா, விகற்பக் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா, இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா, ஒரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா, இரு விகற்ப இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒரு விகற்ப நேரிசை வெண்பா, இரு விகற்ப நேரிசை வெண்பா, ஒரு விகற்ப இன்னிசை வெண்பா,
|