‘யாப்பு’ என்பது, ‘யாப்பு என்னும் அதிகாரம்’ என்றவாறு. ‘யாப்பு’ எனினும்,
‘பாட்டு’ எனினும், ‘தூக்கு’ எனினும், ‘செய்யுள்’ எனினும், ‘தொடர்பு’ எனினும்
ஒக்கும். ஏகாரம், தேற்றேகாரம்; ‘பிரிநிலை’ எனினும், அமையும். என்னை?
‘தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே.’1
என்றாராகலின்.
‘வழிபடு தெய்வ வணக்கம் செய்து, மங்கல மொழி முதல் வகுத்து எடுத்துக்கொண்ட இலக்கிய இலக்கண இடுக்கண் இன்றி இனிதுமுடியும்,’ என்ப ஆகலின், இச்சூத்திரம் இவ்வாறு கூறப்பட்டது எனக்கொள்க. தெய்வ வாழ்த்து முதலிய செய்யுளுள்ளும்,
‘ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
சேதியஞ் செல்வ! நின் றிருவடி பரவுதும்.2
‘காமனைக் கடிந்தனை காலனைக் கடந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பினை
மாமலர் வண்ண! நின் மலரடி வணங்குவதும்.’3
‘ஆரருள் பயந்தனை ஆழ்துயர் தவிர்த்தனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
சீரருள் மொழியைநின் றிருவடி பரவுதும்’7
எனக் கொள்க.
பாயிரம் முற்றியது.
1 தொல். இடை. சூ. 9., 2-3 சூளா. இரத. 95-98.
குறிப்பு : (முதலிற் கூறும் சினையறிகிளவி - முதலாகு பெயர்,
காரணக்குறி - காரணப் பெயர்,) ‘ஐ’ என்றது, ‘அறிவனை’ என்பதிலுள்ள
உருபை.
யாப்பு என்பது ‘‘யாப்பு” என்னும் அதிகாரத்தை உணர்த்துங்கால்
கருவியாகு பெயராம்.
|