|
[நேரிசை ஆசிரியப்பா]
‘குறுங்கால் ஞாழல் கொங்குசேர் நெடுஞ்சினை
ஓங்குதிரை உதைப்ப மருங்கிற் சூழ்ந்த
தண்ணந் துறைவன் பின்னிலை வெம்படர்
பரிந்துநாம் களையா மாயிற் பரியான்
பெருங்கடற் படப்பைநம் சிறுகுடிப்
பொங்குதிரைப் பெண்ணை மடலொடு வருமே.’
இஃது இடை இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க்கண்ணும் கடைச்சீர்க்
கண்ணும் ஈற்று எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், ஒரூஉ இயைபு.
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘பல்லே முத்தம்; புருவம் வில்லே;
சொல்லே அமுதம்; அணங்கவள் நுதலே;
இயலே எண்ணினும் தெரியினும் மயிலே;
கயலே கண்ணும்; நற்கூந்தலும் அறலே.’
இஃது இடை இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க்கண்ணும் கடைச் சீர்க்
கண்ணும் ஈற்று எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால் ஒரூஉ இயைபு.
[நேரிசை ஆசிரியப்பா]
‘வழாஅ நெஞ்சிற்றந் தெய்வந் தொழாஅ1
செறாஅச் செய்தியின் யாங்கணும் பெறாஅ2
தேஎயும் பகலல்கல்5 ஒரீஇத்
தாஅம் செய்வதே செய்வ மனாஅ.’ 3
இது முதற்சீர்க்கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் அளபெடுத்து வரத் தொடுத்
தமையால், ஒரூஉ அளபெடை.
‘ஒரூஉத்தொடை,
இருசீர் இடைவிடில் என்மனார் புலவர்.’
என்றார் அவிநயனார்.
பி - ம்.1 நெஞ்சிற் றெய்வமுந் தொழாஅள் 2பெருஅன் 5பல்பகல் 3தா
அன் செய்வதுவே செய்வ மெனர்அ.
|