|
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘கரிய வெளிய செய்ய கானவர்
பெரிய சிறிய இட்டிய பிறழ்ந்த1
நெடிய குறிய நிகரில் நீலம்
படிய பாவை மாயோள் உண்கண்2
கடிய கொடிய தன்மையும்5உளவே.’
இது முதல் மூன்று சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையால், கூழை
முரண்.
[நேரிசை வெண்பா]
‘நின்றழல் செந்தீயும் தண்புனலும் இவ்விரண்டும்
மின்கலி வானம் பயந்தாங்கும் - என்றும்
பெருந்தோளி கண்ணும் இலங்கும் எயிறும்
மருந்தும் பிணியும் தரும்.’
இது கடை மூன்று சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுத்
தமையால், கூழை இயைபு.
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘விடாஅ விடாஅ வெரீஇப் பெயரும்
தொடாஅத் தொடாஅத் தொடாஅப் பகழியாய்ப்3
பெறாஅப் பெறாஅப் பெறாஅப் பெயரெனச்4
செறாஅச் செறாஅச் செறாஅ நிலையே.’
இது முதல் மூன்று சீர்க்கண்ணும் அளபெடுத்து ஒன்றி வரத் தொடுத்
தமையால், கூழை அளபெடை.
46) மேற்கதுவாய்த் தொடை
முதலயற் சீரொழித் தல்லன மூன்றின்
மிசைவரத் தொடுப்பது மேற்கது வாய்.
‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், மேற்கதுவாய் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : இரண்டாம் சீர்க்கண் இன்றி, அல்லாத மூன்று
சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுத்தால்,
பி - ம். 1வீட்டிய விறந்த 2படிய பாவை யொண்கண் 5தண்மை. 3பாழியர
4பெயர்கள்
|