|
உறுப்பியல் - தொடை ஓத்து 191 |
முரண், முற்று இயைபு, முற்று அளபெடை என்று சிறப்பித்துச் சொல்லப்படும்
(என்றவாறு).
‘சீர்தொறும் தொடுப்பது முற்று’, என்னாது ‘முற்றெனப் படுமே’ என்று
சிறப்பித்தது,
‘கரியவும் வெளியவும் செய்யவும் பசியவும்’
என்றாற்போல முற்றும் முரணாது, முதலிரு சீரும் முரணிப் பின்னைக் கடை
இரு சீரும் மற்றொருவாற்றான் முரணினும் முற்று முரணேயாம் என்றாற்கும்,
இணை முதலாகிய விகற்பமும், கடையிணை முதலாகிய விகற்பமும் அடி
தோறும் வருவது சிறப்புடைத்து, ஓரடியுள்ளும் வரப்பெறுமாயினும் என்றற்கும்
எனக் கொள்க.
‘விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்’
என்ப ஆகலின்.
‘மூன்றுவரிற் கூழை நான்குவரின் முற்றே’
என்றார் பிறரும் எனக் கொள்க.
அவை வருமாறு
[நேரிசை ஆசிரியப்பா]
‘அணியிழை அமைத்தோள் அம்பசப் படைய
அரிமதர் அலர்க்கண் அரும்பனி அரம்ப
அரும்பொருட் ககன்ற அறவோர்
அருளிலர் அற்பின் அழியுமென் அறிவே.’
இஃது எல்லாச்சீர்க்கண்ணும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமை யால்,
முற்று மோனை.
[நேரிசை வெண்பா]
‘கல்லிவர் முல்லையும் மெல்லியலார் பல்லரும்பும்
புல்லார்ந்து1 கொல்லேறு நல்லானைப்-புல்லின
பல்கதிரோன் எல்லைக்கட் செல்லுமா றில்லைகொல்
சொல்லியலார்2 சொல்லிய சொல்?’
இது சீர்தொறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தமையால், முற்று
எதுகை.
பி - ம். 1 புல்லருந்து 2 சொல்லியார்
|