|
உறுப்பியல் - தொடை ஓத்து 193 |
என்றார் பரிமாணார். அவர் இயைபுத் தொடைக்கு விகற்பம் வேண்டிற்றிலர்.
என்னை?
‘செந்தொடை இயைபிவை அல்லா நான்கும்1
முதற்சீர் அடியால் விகற்பம் கொள்ப’.
[பரிமாணார்]
என்றார் ஆகலின்
[கட்டளைக் கலித்துறை]
‘இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொரூஉவாம்
இருசீர் இடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
வருசீர் அயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
வருசீர் முழுவதும் ஒன்றின்முற் றாமென்ப மற்றவையே’.2
‘மோனை விகற்பம் அணிமலர் மொய்த்துட னாமியைபிற்
கேனை எதுகைக் கினம்பொன்னின் அன்ன இனிமுரணிற்
கான விகற்பமும் சீறடிப் பேர தள்பெடையின்
தான விகற்பமும் தாட்டா மரையென்ப தாழ்குழலே!’3
இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.
49) செந்தொடை, இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை
செந்தொடை இரட்டையொ டந்தாதி எனவும்
வந்த வகையான் வழங்குமன் பெயரே
‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், இன்னும் சில தொடைகளது பெயர்
வேறுபாடு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள் இச்சூத்திரம்
செந்தொடையும், இரட்டைத் தொடையும், அந்தாதித் தொடையும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : செந்தொடையும், இரட்டைத் தொடையும், அந்தாதித்
தொடையும் என்று பெயரிட்டு வழங்கப்படும். மற்றொழிந்த தொடைகளும்,
வரலாற்று முறைமையானே பெயரிட்டு வழங்கப்படும் (என்றவாறு).
1. நான்கும், என்றது மோனை, எதுகை, முரண், அளபெடை என்பவற்றை
என்க. 2,3. யா.கா. 19,20.
|