|
செந்தொடையும், இரட்டைத் தொடையும், அந்தாதித் தொடையும்
ஆமாறு போக்கிக் கூறுப.
‘எனவும், ‘வந்த வகையான் வழங்குமன் பெயரே’
என்றதனால், ‘தொடையெல்லாம் ஆராய்ந்து விகற்பித்துக் காணியபுகின்,
பல்கும்; சொல்லி உலப்பிக்கலாகா, அவற்றை வந்த வகையாற் பெயர்
கொடுத்து வழங்கிப் போக்கின் அல்லது’ என்பது சொல்லப்பட்ட தாயிற்று.
அவைதாம் பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது
என்பாரும்1, வரம்பில என்பாரும் என இரு திறத்தர் ஆசிரியர், என்னை?
‘முந்திய மோனை எதுகை அளபெடை
அந்தமில் முரணே செந்தொடை இயைபே
பொழிப்பே ஒரூஉவே இரட்டை என்னும்
இயற்படு தொடைகள் இவைமுத லாகப்
பதின்மூ வாயிரத் தறுநூ றன்றியும்
தொண்ணூற் றொன்பதென் றெண்ணினர் புலவர்’.
‘வல்லொற்றுத் தொடர்ச்சியும் மெல்லொற்றுத் தொடர்ச்சியும்
இடையொற்றுத் தொடர்ச்சியும் முறைபிறழ்ந் தியலும்’
என்றார் சங்கயாப்பு உடையார்
‘மெய்ப்பெறு மரபிற் றொடைவகை தானே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூ ற்றொடு
தொண்டுதலை இட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்றும் என்ப1 உணர்ந்திசி னோரே’<sup>2
என்றார் தொல்காப்பியனார்.
‘மோனை எதுகை முரணே அளபெடை
ஏனைச் செந்தொடை இயைபே பொழிப்பே
ஒரூஉவே இரட்டை ஒன்பதும் பிறவும்
வருவன விரிப்பின் வரம்பில என்ப’
என்றார் பல்காயனார்.
1.2 இங்ஙனம் கூறியவர் இளம்பூரணர் (தொல். பொ. 413 உரை). 1
தொல். பொ. 413.
பி - ம். 1 றொன்பஃ தென்ப (இப்பாட பேதங் கொண்டார் பேராசிரியர்
நச்சினார்க்கினியருமாவர்.)
|