பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              195

     பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்று ஒன்பது தொடை ஆமாறும், அவற்றுள் மிக்கு வருமாறும் உபதேச முறையான் உறழ்ந்து கொள்க.

     உபதேச முறைமையால் உறழுமாறு: நான்கு பாவும் பெற்ற ஐம்பத்தொரு நிலத்தவாகி விரிந்த அறுநூற்று இருபத்தைந்தடியும், அவற்றுள் ஒரே அடி இருபத்திரண்டு தொடையும் பெறப் பதின்மூவாயிரத்து எழுநூற்றைம்பதாய் வரும். அவற்றுள் ஐம்பத்தொரு நிலமும் களையப் பதின் மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது தொடையாம். அடியிரண்டு இயைந்த வழித் தொடையாம் என்ப வாகலின், ஐம்பத்தொரு நிலமும் களையப்பட்டன. என்னை?

[நேரிசை வெண்பா]

     ‘ஆறிரண்டோ டைந்தடியை1 ஐந்நான் கிருதொடையான்
     மாறி நிலமைம்பத் தொன்றகற்றத் - தேறும்
     ஒருபதின்மூ வாயிரத்தோடொன்றூன மாகி
     வருமெழுநூ றென்னும் வகை.

     அறுநூற்று இருபத்தைந்து அடியாவன: ஆசிரிய அடி இருநூற்று அறுபத் தொன்றும், வெண்பா அடி இருநூற்று முப்பத்திரண்டும், கலியடி நூற்று முப்பத்திரண்டும் என இவை என்னை?,

     1 ‘ஆறிண்டோடைந்தடி என்றது முறையே ஆறு இரண்டு ஐந்து என்னும் எண்களை நிறுவிநோக்க அமையும் 625 அடிகளை என்க.

     பத்துக்குறை எழுநூற்றொன்பஃது, அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது, தொண்டு தலையிட்ட அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது, எழுநூற்றெட் டாதல் காண்க. இக்கணக்கிட்டவர் பேராசிரியர்.

     இனி நச்சினார்க்கினியர், ‘பத்துக்குறை எழுநூற்றொன்பஃது, அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பஃது எனக் கொண்டு, அதனைத் தொண்டு தலையிடு வதலாவது, ஒன்பதாற் பெருக்கல் எனக் கருதி. ‘ஒன்பதாற் பெருக்கிய அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது, ஆறாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற் றொன்று என்று கொண்டு இதனை ஐயாயிரத்து ஆறைஞ்ஞு ற்றொடு கூட்டித் தொடை வகை பத்தொன் பதினாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றொன்று என்றார்.