|
[நேரிசை வெண்பா]
‘இருநூற் றிருமுப்பத் தொன்றகவற் கேனை
இருநூற்றோ டெண்ணான்கு வெள்ளைக் - கொருநூற்று
முப்பத் திரண்டாம் முரற்கைக்1 கிவையறுநூற்
றற்றமில் ஐயைந் தடி.2
இருபத்திரண்டு தொடையாவன.
[நேரிசை வெண்பா]
‘மோனை இரண்டாம்; எதுகையோர் எட்டாகும்;
ஏனை முரணைந் தியைபொன்றாம் - ஏனைப்
பொழிப்பாதி ஐந்தும் குறிப்புத் தொடையோ
டிழுக்கா இருபத் திரண்டு’
என இவை.
மோனை இரண்டாவன: அடிமோனையும் கிளை மோனையும் என
இவை.
எதுகை எட்டாவன: இரண்டாம் எழுத்து ஒன்றிய தூஉம், மூன்றாம்
எழுத்து ஒன்றியதூஉம், சீர்முழுது ஒன்றிய தூஉம், கிளை எதுகையும்,
வன்பால் எதுகையும், மென்பால் எதுகையும், இடைப்பால் எதுகையும், உயிர்ப்
பால் எதுகையும் என இவை.
முரண் ஐந்தாவன: சொல்லும் சொல்லும் முரணுதலும், பொருளும்
பொருளும் முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதலும்,
சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதலும், சொல்லும் பொருளும்
சொல்லினொடும் பொருளினொடும் முரணுதலும் என இவை.
இயைபுத் தொடை, கிளை இன்மையின் ஒன்றே.
பொழிப்பாதி ஐந்தாவன: பொழிப்பும், ஒரூஉம், செந்தொடையும்,
இரட்டைத் தொடையும், நிரனிறையும் என இவை.
குறிப்புத் தொடையாவது, எழுத்து அல்லாது மொழி பெயர்ப்பு ஓசை.
அது மாத்திரை குறித்து அலகு பெற வைக்கப்
1. கலிக்கு. 2. யா. வி. 95 உரைமேற்.
|