|
உறுப்பியல் - தொடை ஓத்து 197 |
படும் என்று வேண்டினமையான், அதனாலும் தொடை கொள்ளப்படும்.
இருபத்திரண்டு தொடையாவன:
[குறள் வெண்பா]
‘அடிமோனை ஏனைக் கிளைமோனை என்று
முடியுமாம் மோனைப் பெயர்’
[மோனை, 2]
[நேரிசை வெண்பா]
‘இரண்டாம் எழுத்தொன்றல் மூன்றாவ தொன்றல்
திரண்டமைந்த சீர்முழுதும் ஒன்றல் - முரண்டீர்
கிளைவன்பால் மென்பால் இடைப்பால் உயிர்ப்பால்
விளையும் எதுகையோர் எட்டு’.
[எதுகை 8]
‘மொழியும் மொழியும் பொருளும் பொருளும்
மொழியும் பொருளும் மொழியோ - டழியாத
சொல்லும் பொருளும் பொருளோடு சொற்பொருளும்
சொல்லும் பொருளுமோர் ஐந்து’.
[முரண், 5]
‘பொழிப்பொரூஉச் செந்தொடை பொய்தீர் இரட்டை
அழிப்பில் நிரனிறையோ டைந்தும் - எழுத்தல்
குறிப்புத் தொடையியைபும்1 கொண்டுரைப்பார்க் கல்லால்
நெறிப்படுமோ நூலின் நிலை?’?
[பிற தொடை, 7]
ஐம்பத்தொரு நிலமாவன:
[நேரிசை வெண்பா]
‘வெள்ளை நிலம்பத் தகவல் பதினேழு
துள்ளல் இருநான்கு தூங்கல்பத் - தெள்ளா
இருசீர் அடிமுச்சீர் ஐந்தாறே ழெண்சீர்
ஒருவா நிலமைம்பத் தொன்று’.
[நிலம், 51]
பி - ம். 1 தொடையிவையும் ? தொன்னூல்நிலை
|