பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              209

     ‘பல்வகைத் தொடையொரு பாவினிற் றொடுப்பின்,
     சொல்லிய முதற்றொடை சொல்லினர் கொளலே’.

 என்றார் சிறுகாக்கைபாடினியார்.

     ‘தொடையடி யுட்பல வந்தால் எழுவாய்
     உடையத னாற்பெயர் ஒட்டப்படுமே’.

 என்றார் காக்கைபாடினியார்.

     ‘விகற்பம் கொள்ளா தோசைய தமைதியும்
     முதற்கண் அடிவயின் முடிவ தாகும்’.

 என்றார் பல்காயனார்.

     ‘முதற்சீர்த் தோற்றம் அல்ல தேனை
     விகற்பம் கொள்ளார் அடியிறந்து வரினே’.

 என்றார் நற்றத்தனார்.

     அவை வருமாறு:

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘தாமரை புரையும் காமர் சேவடிப்                 [பொழிப்பெதுகை]
     பவழத1 தன்ன மேனித் திகழொளிக்
     குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின                [ஒரூஉ எதுகை]
     நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர்2 நெடுவேற்            [ஒரூஉ மோனை]
     சேவலங் கொடியோன் காப்ப
     ஏம வைகல் எய்தின்றால் உலகே’.1             [பொழிப்பு மோனை]

     இதனுள் பொழிப்பெதுகையும், ஒரூஉ எதுகையும், ஒரூஉ மோனையும்,
 பிறிதும் வந்தனவாயினும், முதல் வந்ததனானே பெயர் கொடுத்துப் பொழிப்
 பெதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும்.

[நிலைமண்டில ஆசிரியப்பா]

     ‘வேரல் வேலி வேர்க்கோட் பலவின் [கூழை மோனை]

     [அடி எதுகை] சாரல் நாட! செவ்வியை ஆகுமதி;


  1. குறுந். கட். வாழ்த்து பி - ம். ? பவளத் 11 வெஞ்சுடர்.