பக்கம் எண் :
 

 210                                   யாப்பருங்கல விருத்தி

     யாரஃ தறிந்திசி னோரே? சாரற் [ஒரூஉ எதுகை]
                                                  [இணை முரண்]
     சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
                                            [கடை இணை எதுகை]
     உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே!’1 [பின் முரண்]

 இதனுள் அடி எதுகையும், கூழை மோனையும், ஒரூஉ எதுகையும், இணை
 முரணும், கடையிணை எதுகையும், பின் முரணும் வந்தன வாயினும், முதல்
 வந்ததனாற் பெயர் கொடுத்து, அடி எதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும்.

[நேரிசை ஆசிரியப்பா]

 [அடி     ‘கடிமலர் புரையும் காமர் சேவடி [பொழிப்பு மோனை]
 எதுகை]   கொடிபுரை நுசுப்பிற் பணைத்தேந் திளமுலை
 [அடி     வளையொடு கெழீஇய வாங்கமை நெடுந்தோள்
                                                    [பொ. மோ.]
 மோனை]  வளர்மதி புரையும் திருநுதல் அரிவை
 [அடி     சேயரி நாட்டமும் அன்றிக்
 முரண்]   கருநெடுங் கூழையும் உடையவால் அணங்கே’.

 இதனுள் எதுகையும், மோனையும், முரணும் முறையே வந்தன வாயினும்,
 முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, அடி எதுகைச் செய்யுள் என்று
 வழங்கப்படும்.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘பரவை மாக்கடல் தொகுதிரை1 வரவும்              [பொ. முரண்]
     பண்டைச் செய்தி இன்றிவண1 வரவும               [பொ. முரண்]
 [அடி. மோ.] பகற்பின் முட்டா திரவினது வரவும்           [பொ. முரண்]
     பசியும் ஆர்கையும் வரவும்
     பரியினும் போகா துவப்பினும் வருமே’.2

 ‘இதனுள் மோனையும், இயைபும், முரணும் வந்தன வாயினும், முதல்
 வந்ததனாற் பெயர் கொடுத்து அடிமோனைச் செய்யுள் என்று வழங்கப்படும்
 பிற’, எனின், அற்றன்று; முறையானே வேறு வேறு தொடைகள் பெற்று
 வாராது, பலவாய் வந்து, இறுவாய் ஒத்தமையின், மயக்கு இயைபு எனக்
 கொள்க.


  1 குறுந். 18, யா. வி. 74 உரைமேற். 2-3 யா. வி. 40 உரைமேற்.

  பி - ம். 1 படுதிரை 2செய்தியினின்றிவள்