பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              211

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘ஓங்குவரை1 அமன்ற வேங்கைநறு மலரும்
     ஊர்கெழு நெய்தல் வார்கெழு மலரும்
     பழனத் தாமரை எழினிற மலரும்
     இல்லயற் புறவின் முல்லைவெண் மலரும்
     உராஅம் கடற்றிரை விராஅ மலரும்
     வேறுபட மிலைச்சிய நாறிருங் குஞ்சி
     ஏந்தல் பொய்க்குவன் எனவும்
     பூந்தண் உண்கண? புலம்பா னாவே’.1

 இதுவு மயக்கு இயைபுத் தொடை என்று வழங்கப்படும். மயக்கு அளபெடைத்
 தொடையும் வந்தவழிக் கண்டு கொள்க.

[கட்டளைக் கலித்துறை]

     ‘காய்ந்துவிண் டார்நையக் காமரு கூடலிற் கண்சிவந்த
     வேந்துகண் டாயென்ன வெள்வளை சோரக் கலைநெகிழப்
     போந்துகண் டாரொடும் போந்துகண் டேற்கவன் பொன்முடிமேற்
     போந்துகண் டாளென்று போந்ததென் மாட்டோர் புறனுரையே.’2

 இதனுள் எதுகையும், அதற்கேற்ற மோனையும் வந்தன வாயினும், முதல்
 வந்ததனாற் பெயர் கொடுத்து, ஆசிடை எதுகைச் செய்யுள் என்று
 வழங்கப்படும்.

    இனித் தளைக்குச் சொல்லுமாறு:

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப் பலவின்
     விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கடுவன்
     உண்டுசிலம் பேறி ஓங்கிய இருங்கழைப்
     படிதம் பயிற்றும் என்ப
     மடியாக் கொலைவில் என்னையர்5 மலையே’.

 இதனுள் வெண்டளையும், கலித்தளையும், வஞ்சித்தளையும் வந்தன எனினும்,
 முதல் வந்ததனாற் பெயர் கொடுத்து, வெண்டளையால் வந்த ஆசிரியப்பா
 என்று வழங்கப்படும்.


  1. யா. வி. 40 உரைமேற். 2. யா. வி. 94 உரைமேற்

  பி - ம். 1ஓங்குமலை ? ஒண்கண். 5எம்மையர்