பக்கம் எண் :
 

 212                                   யாப்பருங்கல விருத்தி

[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

     ‘கடுநாக மதனடக்கி நெடுநீர்ப் பொய்கைக்
     கடிமலர்வேய்ந் துலகளவும் பரந்த1கந்த
     நெடுமாலை நறுமுடிமேல் வைத்தி யேனும்
     நின்னையெற் பொன்னயக்க? நின்றார் எல்லாம்
     கொடுமாலை வினையரக்கர் குறும்பு சாயக்
     குளிரிளம்பூம் பிண்டிக்கீழ் அமர்ந்த கோமான்
     தடுமாற்றம் தலைப்பிரிக்கும் சரணம் அல்லால்
     தலைக்கணியாள் என்றுரைத்தல் தகவோ வாழி!’

 இதனுட் கலித்தளையும், ஆசிரியத்தளையும், வெண்டளையும் வந்தவாயினும்,
 முதல் வந்த தளையாற் பெயர் கொடுத்து, கலித் தளையால் வந்த ஆசிரிய
 விருத்தம் என்று வழங்கப்படும். பிறவும் இவ்வாறே பெயர் கொடுத்து
 வழங்குக.

     ‘தொடையும் தளையும் பலவிர விவரின்
     முதல்வந் ததனால் மொழிந்திசிற் பெயரே’.

 என்றாலும் கருதிய பொருள் பயக்கும், ‘தொடைபல தொடுப்பினும் தளைபல
 விரவினும்’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

     விகற்பமும் இனமும் வாராமைத் தொடுத்த மோனை, எதுகை, முரண்,
 இயைபு, அளபெடைகளைச் செம்மோனை, செவ்வெதுகை, செம்முரண்,
 செவ்வியைபு, செவ்வளபெடை என வழங்கப்படும் என்பதூஉம், கடையாகு
 மோனைக்கும் கடையாகு எதுகைக்கும் ஏற்று வந்தால், எதுகைத் தொடை
 யானே பெயரிட்டு வழங்கப்படும் என்பதூஉம்; மோனையும் எதுகையுமாய்
 வந்து முரணினால், மோனை முரண் என்றும், எதுகை முரண் என்றும்
 பெயரிட்டு வழங்கப்படும் என்பதூஉம்; இணை மோனை முதலாகிய தொடை
 விகற்பங்களும் ஓரடியுட் பல விரவி வந்தால், வரன்முறையாற் பெயரிட்டு
 வழங்கப்படும் என்பதூஉம்; ‘வரனடை இல்லாதவழி யாதானும் ஒன்றாற்
 பெயர் கொடுத்து வழங்கப்படும்’ என்பாரும், ‘விகற்ப மயக்கம் என்பாரும்
 என இரு திறத்தார் ஆசிரியர் என்பதூஉம்; ஓரடியுள் முதற் குறில்
 விட்டிசைத்து,


  பி - ம். 1 பரந்து ? நின்னையே போன யக்க.