பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              213

 மற்றை அடியுள் முதற்கட் குற்றெழுத்து வல்லொற்றடுத்து வந்தால், அதனை
 விட்டிசை வல்லொற்றெதுகை என்று வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பதூ
 உம்; செய்யுள் ஈற்றடி இறுதி எழுத்தொன்றும் இரண்டும் மிகினும் இழுக்காது
 என்பதூஉம்; இரட்டைத் தொடை இறுதிக்கண் ஓரெழுத்துக் குறையினும்
 இழுக்காது என்பதூஉம்; செய்யுளந்தாதி தொடுக்கின் ஈற்றெழுத்தானும்
 சொல்லானும் இடையிட்டேறத் தொடுப்பினும் இழுக்காது என்பதூஉம்;
 அவற்றின் வழியெதுகை முதலிய வந்து முன் சொல்லப்பட்ட தொடையும்
 தொடை விகற்பமும் போலாமைத் தொடுத்து வருவனவற்றைச் செந்தொடை
 மருள் என்றும் மருட்செந்தொடை என்றும் வேண்டுவர் ஒருசார் ஆசிரியர
 என்பதூஉம்; மகார வகாரங்கள் அருகி எதுகையாய் வரினும் இழுக்காது
 என்பதூஉம் அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

     ‘விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்’.

 ஆகலின்.

    அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘சிலம்படி மாதர் நன்னலம் குறித்துச்
     சிலம்பதர் நள்ளென் கங்குற்
     சிலம்பநீ வருதல் தகுவதோ அன்றே’.

 இஃது இன எழுத்தும் விகற்பமும் வரத் தொடுத்ததின்மையால், செம்மோனை.

[குறள் வெண்பா]

     ‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
     ஒன்றுநன் றுள்ளக் கெடும்.’1

 எனவும்,

[கலி விருத்தம்]

     ‘வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர்
     விண்ட நறப்பரு கிக்களி யின்மதர்
     கொண்டு நடைக்களி அன்னம் இரைப்பதொர்
     மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார்’.2


  1 குறள் 109. 2. சூளா. சீய. 85