பக்கம் எண் :
 

 214                                   யாப்பருங்கல விருத்தி

 எனவும் இவை இனம் முதலாயின வரத் தொடுத்திலாமையின், செவ்வெதுகை.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘கருங்கடல் உடுத்த மல்லல் ஞாலத்துச்
     செம்மையின் வழாஅது கொடைக்கடம் பூண்டு
     வாழ்வது பொருந்தா தாகிற்
     சாவதும் இனிதவர் வீவதும் உறுமே’.

 இது செம்முரண்.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘துப்புறழ் செவ்வாய்க் கிளவியும் அணங்கே;
     கருங்கண் வெம்முலைத் தொய்யிலும் அணங்கே;
     வாணுதற் றிலகமும் அணங்கே;
     சிலம்படி மாதர் நாட்டமும் அணங்கே’.

 இதில் இனம் முதலாயின வரத் தொடுத்திலாமையான் செவ்வியைபு.

[குறள் வெண்பா]

     ‘தாஅ மரைமேல் உறையும் திருமகள்
     போஒலும் மாதர் இவள்’.

 இது செவ்வளபெடை.

     ‘நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
     நெஞ்சத் தவலம் இலர்’.1

 எனவும்,

     ‘கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
     சொல்லா நலத்தது சால்பு’.2

 எனவும் இவற்றுள் முதலது வருக்க மோனைக்கும் மெல்லின எதுகைக்கும்
 ஒத்து வந்ததாயினும்; இரண்டாவது எதுகைக்கும் இன மோனைக்கும் ஒத்து
 வந்ததாயினும், எதுகை என்று வழங்கப்படாது, கடையாகு மோனை என்று
 வழங்கப்படும். பிறவும் அன்ன.

[குறள் வெண்பா]

     ‘சொல்லுப சொல்லப் பொறுப்பவே1; யாதொன்றும்
     சொல்லாத? சொல்லப் பொறா’ 5


  1 குறள் 1072 2 குறள் 984, யா. வி. 57 உரைமேற்.

  பி - ம். 1 பெறுபவே 2 சொல்லாது 5 பெறா.