பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              215

 இது மோனையாய் வந்து முரணினமையால், மோனை முரண்.

     ‘இன்பம் விழையான் வினைவிழைவான், தன்கேளிர்
     துன்பம் துடைத்தூன்றும் தூண்.’1

 எனவும்,

     ‘அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்;
     மறத்திற்கும் அஃதே துணை’.2

 எனவும் இவை எதுகையாய் வந்து முரணினமையான், எதுகை முரண்.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘மீன்றேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு
     தேனார் ஞாழல் விரிசினைக் குழூஉம்
     தண்ணத் துறைவன் தவிர்ப்பவும் தவிரான்;
     தேரோ காணலம்; காண்டும்
     பீரேர் வண்ணமும் சிறுநுதல்! பெரிதே’.3

 கடையிணை முரண் என்று காட்டப்பட்ட இச்செய்யுளுள், ‘தண்ணந்
 துறைவன் தவிர்ப்பவும் தவிரான்’ என்னும் அடியுள் மேற்கதுவாய்
 மோனையும் கடையிணை முரணும் வந்தவாயினும், அவற்று ஐயடியின்
 வரனடை முறையான் அதனையும் கடையிணை முரண் என்று வழங்கப்படும்.

     ‘வேரல் வேலிவேர்க்கோட் பலவின்’4

 என்னும் பாட்டினுள்,

     ‘சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்’

 என்னும் அடியினுள் இணைமுரணும், கடையிணை எதுகையும் வந்தன
 வாயினும், யாதானும் ஒன்றினாற் பெயர் கொடுத்து, ‘இணை முரண்’
 என்றானும், ‘கடையிணை எதுகை’ என்றானும் வழங்கப்படும். அல்லாத அடி
 ஒரு தொடையாகிய வரனடை இல்லாமையால், அதனை ‘விகற்ப மயக்கம்’ ?
 எனினும் இழுக்காது.


  1. குறள் 615. 2. குறள் 76. யா. வி. உரைமேற். 3. யா. வி. 39 உரைமேற்.
 4. குறுந். 18.

  பி - ம்.: ? மயக்கம்