[குறள் வெண்பா]
‘பற்றிப் பலகாலும் பான்மறி உண்ணாமை
நொஅலையல் நின்னாட்டை நீ.’
எனவும்,
[கலி நிலைத்துறை]
‘அஇ உஎ ஒஎனும1ஐந்தொழித் தல்லாத
ஒத்தொலி? நீண்டிசை வண்ணமென் றோதிய தோத்தாமோ?
கசட5 தப்பவிந் நாலய னான்கும் கருதாதே
முத்தொடு கோத்த முழாத்தலை வைப்பது மூடன்றே.’
இவற்றுள் முதற்குறில் விட்டிசைத்து வல்லொற்று அடுத்தாற் போன்று அல்லாத அடி முதற்கண் குற்றெழுத்து வல்லொற்று அடுத்து வந்தமையால், விட்டிசை வல்லொற்று எதுகை.
[நேரிசை ஆசிரியப்பா]
‘மாயோன் கூந்தற் குரலும் நல்ல;
கூந்தலில் வேய்ந்த மலரும் நல்ல;
மலரேர் உண்கணும் நல்ல;
பலர்புகழ் ஓதியும் நனிநல் லவ்வே’.1
எனவும்,
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘பூந்தண் பொழிலிடை வாரணம் துஞ்சும்;
பூங்கண் அன்னை இல்லிடைத் துஞ்சும்;
பூங்கொடிப் புனத்தயற் குறவன் துஞ்சும்;
பூசலிக் களவென யாத்துலஞ் சலமே’.2
எனவும் இயைபுத் தொடைச் செய்யுள் என்று சொல்லப் பட்டனவற்றுள் ஈற்றடி ஒன்றும் இரண்டும் எழுத்து மிக்கவாறு கண்டு கொள்க.
‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்’
என்னும் இரட்டைத் தொடையின் ஈற்றுச் சீர் ஈற்றெழுத்து ஒன்று குறைந்து வந்தவாறு கண்டு கொள்க.
1-2 யா. வி. 40 உரைமேற். (முதற் செய்யுளில் ‘வே’ என்னும் ஒரெழுத்தும், இரண்டாஞ் செய்யுளில் ‘லமே’ என்னும் ஈரெழுத்தும் மிக்க எழுத்தெனக் கொள்க).
பி - ம்.: 1 அஇ உண்ணிருலுக் கென்னும்? ஒற்றொலி 5கச்சட
|