பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              219

     இனி, அவற்றுக்குச் செய்யுள் வருமாறு.

[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

     ‘அருந்தவர்கட் காதியாய் ஐயம் நீக்கி
          ஒளவியந்தீர்த் தவிரொளிசேர் ஆக்கை எய்தி
     இருந்திரள்கை இனமருப்பின் யானை யூர்தி
          ஈரைஞ் ஞூ றெழில்நாட்டத் திமையோன் ஏத்த
     ஒருங்குலகின் நூல்கற்றோர் ஓத முந்நீர்
          ஒலிவளர அறம்பகர்ந்த உரவோன் பாதம்
     கருங்கயற்கட் காரிகையார் காதல் நீக்கிக்
          கைதொழுதாற் கையகலும் கவ்வை தானே’.

 எனவும்,

     வண்டிவரும் மலர்வெட்சி மாலை மார்பன்
          மால்வேண்ட மண்ணளித்த மலிதோள் வள்ளல்
     ஞண்டிவரும் தண்படப்பை ஞாழல் மூதூர்
          நரபதிக்கு வான்கொடுத்த நகைவேல் நந்தி
     தண்டிவரும் தடவரைத் தோள் சயந்தன் வாடச்
          சதுமுகனைச் சயஞ்செய்த சங்க பாலன்
     தெண்டிரைவாய்த் திருமகளோ டமிர்தம் கொண்டான்
          சீர்பரவச் சென்றகலும் செல்லல் தானே’.

 எனவும் இனவெழுத்து வந்தவாறு கண்டு கொள்க.

     ‘மாகந் திவண்டு .. கடிமா ணகரத்து நாமம்’

 என்னும் பாட்டின் மூன்றாம் அடியும்,

     ‘மாயாத தொல்லிசைச் சாகர தத்தன் என்பான்’

 என்னும் பாட்டினுள் நடுவிரண்டடியும் இனவெழுத்து வந்திலாமையாற் பிற,
 எனின்

     ‘அருகி இனவெழுத் தணையா வாயினும்
     வரைவில என்ப வயங்கி யோரே’

 என்ப வாகலின் அமையும்.

     இனி வழி எதுகை ஆமாறு:

[பதின்சீர் ஆசிரிய விருத்தம்]

     ‘கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு
          கூடி நீடும் ஓடை நெற்றி
 வெங்கண்யானைவேந்தர்போந்துவேதகீத