உறுப்பியல் - தொடை ஓத்து 221 |
பி - ம்.1 பூர்வம் ? யோதும் ? சென்று தண்ணென்
4 நிறைவெண்பல்.
வல்லின நடையானும், மெல்லின நடையானும், இடை யின நடையானும் எடுத்துக் கொண்ட நடையின் வழுவாது வரத்தொடுத்து முடிப்பது செய்யுள் கட்குச் சிறப்புடைத்து. வல்லின நடையாவது, வல்லெழுத்து மிகத் தொடுப்பது; மெல்லின நடையாவது மெல்லெழுத்து மிகத் தொடுப்பது; இடையின நடையாவது இடையெழுத்து மிகத் தொடுப்பது.
பிறவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.
[நேரிசை வெண்பா]
‘‘எழுத்து மொழிபொருளென் றெண்ணிய மூன்றின்
வழுக்கின் முறைமை வகையா - விழுக்கில்
அடியோ டடியியைந்து மந்தரித்தும் வந்தாற்
றொடையென்பர் தொன்னூ லவர்”
‘‘தொடையுந் தொடைவிகற்புந் தொல்புலவோர்
சொற்ற
நடையின் வழுவாமை நாடிக் - கடல்பயந்த
சீரார் திருவீசுஞ் செய்யுட் கெழுவாயு
மாராயத் தீரு மரில்”.
தொடையோத்து முடிந்தது
உறுப்பியல் முற்றிற்று.
பி - ம். சீரார் திருவீகம் செய்யுட் கெழுவாயும்.....கெழுகாண்டம்
|