பக்கம் எண் :
 

 224                                   யாப்பருங்கல விருத்தி

    ‘வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சியெனப் பாநான்கு ஆகும்’ என்னாது,
 ‘பண்பாய்ந் துரைத்த பாநான் காகும்’ என்று சிறப்பித்துச் சொல்ல வேண்
 டியது என்னை? எனின், வெண்பா முதல் வந்து ஆசிரியமாய் இறுவன, சிறப்
 பின்மையால், மருட்பா என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. என்னை?

     ‘வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி
     கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும்’.1

 என்றாராகலின்.

     அவ்வாறு வருவனதாம், புறநிலை வாழ்த்தும், வாயுறை வாழ்த்தும்,
 செவியறிவுறூஉவும் என இவை. என்னை?

     ‘புறநிலை வாயுறை செவியறி வுறூஉ வெனத்
     திறநிலை மூன்றும் திண்ணிதிற் றெரியின்,
     வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும்
     பண்புற முடியும் பாவின என்ப’.2

 என்றாராகலின்,

     அவை வருமாறு:

[மருட்பா]

     ‘தென்றல் இடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை
     முன்றில் முகைவிரியும் முத்தநீர்த் தண்கோளூர்க்
     குன்றமர்ந்த கொல்லேற்றான் நிற்காப்ப என்றும்
     தீரா நண்பிற் றேவர்
     சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே’.

 இது ‘வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு ஒரு காலைக்
 கொருகாற் சிறந்து பொலிவாய்!’ என்றமையான், புறநிலை வாழ்த்து மருட்பா.3

[மருட்பா]

     ‘பலமுறையும் ஓம்பப் படுவன கேண்மின்
     சொலன்முறைகட்1 டோன்றச் சுடர்மணித்தேர் ஊர்ந்து
     நிலமுறையின் ஆண்ட நிகரிலார் மாட்டும்
     சிலமுறை அல்லது செல்வங்கள் நில்லா;


  1. காக்கைபாடினியார் (தொன்னூல், பக். 176). 2. தொல். பொ. 473. 3.
 தொல். பொ. 422.           பி - ம்.1சொலன்முறைக்கட்