பக்கம் எண் :
 

 226                                   யாப்பருங்கல விருத்தி

     அவையார் கொடுநாத் திருத்தி - நவையாக
     நட்டார் குழிசி சிதையாதி - ஒட்டார்
     செவிபுதைக்கும் தீய கடுஞ்சொற்கலிபடைத் தாய்?
     கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகிச்
     செற்றார்ச் செகுத்துநிற்5 சேர்ந்தாரை ஆக்குதி;
     அற்றம் அறிந்த அறிவினாய்!-மற்றும்
     இவையிவை நீயா3 தொழுகின் நிலையாப்4
     பொருகடல் ஆடை நிலமகள்
     ஒருகுடை நீழல் துஞ்சுவள் மன்னே’.

 இது, ‘வியப்பின்றி உயர்ந்தோர்கண் அவிந்து ஒழுகுதல் கடன்’ என்று
 அரசற்கு உரைத்தமையான், செவியறிவுறூஉ மருட்பா எனப்படும். என்னை?

     ‘செவியறி தானே,
     பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
     அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே’.1

 என்றாராகலின்.

     இவை இவ்வாறே அன்றி, வெண்பாவேயாயும், ஆசிரியமேயாயும் வரப்
 பெறும். கலியும் வஞ்சியுமாய் வரப் பெறா. என்னை?

     ‘வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப்
     பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
     பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே
     கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ’.2
     ‘வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே
     செவியறி வுறூஉவென இவையும் அன்ன’.3

 என்றாராகலின்.

 கைக்கிளையும் வெண்பா முதலாக ஆசிரிய இயலான் இறும். என்னை?

     ‘கைக்கிளை தானே வெண்பா வாகி
     ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே’.4

 என்றாராகலின்.


  1 தொல். பொ. 426. 2 தொல். பொ. 422. 3 தொல். பொ. 423 4 தொல்.
 பொ. 431.

  பி - ம்.: ? கலியுடைத்தாய் 5 செலுத்திநிற் 3 வியா 4நிலையம்