|
வரலாறு:
[மருட்பா]
‘திருநுதல் வேரரும்பும்; தேங்கோதை வாடும்;
இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த
போகிதழ்1 உண்கணும் இமைக்கும்;
ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே’.1
எனவும்,
[மருட்பா]
‘நிழன்மணி நின்றிமைக்கும் நீளார மார்பின்
அழன்மணி நாகத் தணையான் - கழன்மணிசூழ்
பொன்னகரம் போகிய? பூம்பனிச்சை நன்னீர்
இளந்தளிர் மாவனுக்கும் மேனி - விளங்கும்
நளிமலர் நறுநுதல்5 அரிவை
அளிமதி யிஃதோ3 அகலுமென் உயிரே’
எனவும் கொள்க.
கைக்கிளையும் வெண்பா முதலாய் ஆசிரியம் ஈறாய் வரும் வழி, ஆசிரிய அடி இரண்டேயாய், அவற்றுள் ஈற்றடி நாற்சீராய், ஈற்றயலடி முச்சீராய் வருவது எனக் கொள்க. என்னை?
‘இருதலைக் காமம் இன்றிக் கைக்கிளை
ஒருதலைக் காம மாகக் கூறிய
இலக்கண மரபின் இயல்புற நாட்டி
அதர்ப்பட மொழிந்தனர் புலவர் அதுவே
பெறுதி வெண்பா உரித்தாய் மற்றதன்
இறுதி எழுசீர் ஆசிரி யம்மே’.
‘வெண்பா ஆசிரி யத்தாய் மற்றதன்
இறுதி எழுசீர் ஆசிரி யம்மே’.
‘கைக்கிளை மருட்பா வாகி வருகால்
ஆசிரியம் வருவ தாயின் மேவா
முச்சீர் எருத்திற் றாகி முடிவடி
எச்சீ ரானும் ஏகாரம் இறுமே’.
1. புறப். வெண். கைக்கிளை 3.
பி - ம். 1 சேயிதழ் ? போக்கிய 5 நன்னுதல் 3 யாதோ
|