|
அவை கூட்டி வழங்குமாறு: புறநிலை வாழ்த்துச் சம மருட்பா, புறநிலை வாழ்த்து வியன் மருட்பா, வாயுறை வாழ்த்துச் சம மருட்பா, வாயுறை வாழ்த்து வியன் மருட்பா, செவியறிவுறூஉச் சம மருட்பா, செவியறிவுறூஉ வியன் மருட்பா, கைக்கிளைச் சம மருட்பா, கைக்கிளை வியன் மருட்பா எனக் கொள்க.
வரலாறு :
[மருட்பா]
‘கண்ணுதலான் காப்பக் கடல்மேனி மால்காப்ப
எண்ணிருந்தோள் ஏர்நகையாள் தான்காப்ப - மண்ணியநூற1
சென்னியர் புகழுந் தேவன்?
மன்னுக நாளும் மண்மிசைச் சிறந்தே’51
என்பது புறநிலை வாழ்த்துச் சம மருட்பா.
‘தென்ற லிடைபோழ்ந்து’2 என்பது, புறநிலை வாழ்த்து வியன் மருட்பா.
[மருட்பா]
‘நில்லாது செல்வம்; நிலவார் உடம்படைந்தார்;
செல்லார் ஒருங்கென்று சிந்தித்து - நல்ல
அருளறம் புரிகுவி ராயின்
இருளறு சிவகதி எய்தலோ எளிதே’.
இது வாயுறை வாழ்த்துச் சம மருட்பா.
‘பலமுறையும் ஓம்பப் படுவன கேண்மின்:’3
என்பது வாயுறை வாழ்த்து வியன் மருட்பா.
[மருட்பா]
‘இருமூன்றில் ஒன்றுகொண் டேதம் கடிந்து
பெருநீர்மை யார்தொடர்ச்சி பேணி - இருநிலம்
காப்பா யாகுமதி கடனென
மாப்பெருந் தானை மன்னர் ஏறே!’
இது செவியறிவுறூஉச் சம மருட்பா.
‘பல்யானை மன்னர்’4
என்பது செவியறிவுறூஉ வியன் மருட்பா.
1. பெரும் பொருள் விளக்கம். 2. யா. வி. பக். 167. 3 யா. வி. பக். 168. 4. யா. வி. பக். 168,
பி - ம்.: 1 பண்ணியனூல் ? களிக்கும் செல்வனீ 5 மண்மிசை யானே.
|