பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         267

64) குறட்டாழிசை

     ‘அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
     சந்தழி குறளும் தாழிசைக் குறளே.’

 இச் சூத்திரம் குறட்டாழிசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள் : அந்தடி குறைநவும் - இரண்டடியாய் ஈற்றடி குறைந்து வருவனவும் (‘இரண்டடி’ என்பது, அதிகார வரைவினால் உரைக்கப்பட்டது) செந்துறைச் சிதைவும் - விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றி வெண் செந்துறையிற் சிதைந்து இரண்டடியும் ஒத்து வருவனவும், சந்தழி குறளும் - செப்பலோசையிற் சிதைந்து வந்த குறள் வெண்பாவும், தாழிசைக் குறளே - குறட்டாழிசை என்றும், தாழிசைக் குறள் என்றும் வழங்கப்படும் (என்றவாறு)

 அவற்றுக்குச் செய்யுள் வருமாறு :

[குறட்டாழிசை]

     ‘நீல மாகடல் நீடு வார்திரை நின்ற போற்பொங்கிப்
       பொன்றும் ஆங்கவை
     காலம்பல காலம் சென்று செல்வ1 யாக்கை கழிதலுமே’.

 எனவும்,

     ‘பாவடிமத யானை மன்னர்கள்
       பைம்பொன்? நீள்முடி மேல்நிலாவிய
     சேவடி எங்கோமான் செழும்பொன் எயிலவனே’.

 எனவும்,

     ‘நண்ணு வார்வினை நைய நாடொறும்
       நற்ற வர்க்கர சாய ஞானநற்
     கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே’.

 எனவும்,

     ‘தண்ணந் தூநீர் ஆடச் சேந்த
     வண்ண ஓதி கண்’.

 எனவும் இவை இரண்டடியாய், ஈற்றடி குறைந்து வந்த குறட்டாழிசை.


  பி - ம்.1 செவ்வ ? மன்னர் பைம்பொன்னின்