பக்கம் எண் :
 

 268                                   யாப்பருங்கல விருத்தி

     ‘உறிபோல் நரம்பெ ழுந்தும் பளத்தி
     சிறியள் செவிசிந் திலபொரித் தனவே’.

 எனவும்,

     ‘திடுதிம் மெனநின் றுமுழா அதிரப்
     படிதம் பயில்கூத் தருமார்த் தனரே’.

 எனவும்,

     ‘அறந்தருவா னன்றோ1 புறந்தருவா னன்றோ?
     மறந்தேயு மையாங் கிறுங்கிடுதிர் கண்டீர்’.

 எனவும்,

     ‘அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி
     மறுவறு பத்தினி போல்வையி5 னீரே’.

 எனவும்,

     ‘பிண்டியி னீழற் பெருமான் பிடர்த்தலை
     மண்டிலந் தோன்றுமால் வாழி அன்னாய்!’

 எனவும்

     ‘என்னே சொல்லுதி வாழி நங்காய்!
     பொன்னே சொல்லுவன் போகு நங்காய்!

 எனவும் இவை ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் இன்றி, இரண்டடியும் ஒத்து வந்தமையாற் செந்துறை சிதைந்த குறட்டாழிசை.

     ‘கோடல் மன்னு பூங்கானல் குயில்கள்
        மன்னு நீள்சோலை
     நாட வருநம் மினியர் நயந்து’.

 எனவும்,

     ‘வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
     பண்டையள் அல்லள் படி’.

 எனவும் இவை நாலசைச் சீரால் வந்தும், வேற்றுத் தளை விரவியும் செப்பலோசை அழிந்தும் வந்தமையால், சந்தழி குறட்டாழிசை. பிறவும் அன்ன.


  பி - ம். 1 னொன்றோ ? னொன்றோ 5 போல் வயி. செல்லுதி.