பக்கம் எண் :
 

 270                                   யாப்பருங்கல விருத்தி

66) வெண்டாழிசை

     ‘அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய்
     விடினது வெள்ளொத் தாழிசை யாகும்’.

 இச் சூத்திரம், வெண்டாழிசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : அடி மூன்றாய், ஈற்றடி முச்சீராய், இறுவன யாவை? அவை ‘வெள்ளொத்தாழிசை’ என்றும் ‘வெண்டாழிசை’ என்றும் வழங்கப்படும் (என்றவாறு).

     ‘அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய்
     வெள்ளொத் தாழிசை ஆகும்’.

 என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும். ‘விடினது’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

     சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன்று வந்து நடப்பன ‘வெள்ளொத்தாழிசை’ எனப்படும் என்றற்கும்; வெள்ளொத்தாழிசை கொள்ளாது, பிற தளைதட்டு, ஒன்றாயும் இரண்டாயும் ஒரு பொருண் மேல் மூன்றாயும், மூன்றின் மிக்கு வருவனவும் எல்லாம் ‘வெண்டாழிசை’ எனப்படும் என்பது அறிவித்தற்கும் வேண்டப்பட்டது.

     பிறரும்,

     ‘ஈரடி முக்கால் இசையினும் தளையினும்
     வேறுபட் டியல்வன வெண்டாழிசையே’.

 என்றார் எனக்கொள்க.

     வெள்ளோசை கொண்டு வேற்றுத்தளை விரவாது ஒரு பொருண்மேல் மூன்றாயும், வெள்ளோசை தழுவாது வேற்றுத் தளை விரவி ஒரு பொருண்மேல் ஒன்றாயும், இரண்டு இணைந்தும், மூன்றின் மிக்கும், மூன்று அடுக்கிப் பொருள் வேறாயும் வருவன எல்லாம் ‘ஈரடி முக்கால்’ என்னும் வெண்பாவின் இனமெனக் கொள்க.

     அவற்றிற்குச் செய்யுள் வருமாறு: