|
[வெள்ளொத்தாழிசை]
‘அன்னாய்! அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்?’
‘ஏடீ! அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
‘கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
வீடான1 துறந்து விடல்?’
‘பாவாய்! அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
காவான் துறந்து விடல்?’
என இவை வெள்ளோசை கொண்டு, வேற்றுத்தளை விரவாது, ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வந்தமையின், வெள்ளொத்தாழிசை.
[வெண்டாழிசை]
‘போதார் நறும்பிண்டிப் பொன்னார் மணியணையான்?
தாதார் மலரடியைத் தணவாது வணங்குவார்
தீதார் வினைகெடுப்பார் சிறந்து’.1
இது வெள்ளோசை தழுவாது, வேற்றுத்தளை விரவி, முதற்கண்
வெண்டளை தட்டு வந்தமையான், ‘வெண்டாழிசை’ எனப்படும்.
[வெண்டாழிசை]
‘நன்பி5 தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவ3 செய்யார்
அன்பு வேண்டு பவர்’.2
இஃது ஆசிரியத்தளையான் வந்த வெண்டாழிசை.
[வெண்டாழிசை]
‘சீர்கொண்ட கருங்கடலிற் றிரைமுகந்து வலனேந்திக்
கார்வந்த ததனோடும் கமழ்குழலாய்! நிற்பிரிந்தார்
தேர்வந்த திதுகாணாய் சிறந்து’.
இது கலித்தளையான் வந்த வெண்டாழிசை.
1 யா. வி. 15 உரைமேற். 2 யா. வி. 15 உரைமேற்.
பி - ம். 1 நீடான். ? மணியனையான் 5 நண்பி 3 முனிவு
|