பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         273

     அவற்றை ஓரொலி வெண்டுறை என்றும், வேற்றொலி வெண்டுறை என்றும் வழங்குப.

     வரலாறு :

[ஓரொளி வெண்டுறை]

     ‘தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம்
     யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
     பீலிபோற் சாய்த்து விடும்பிளிற்றி யாங்கே’.

 இது மூன்றடியாய், ஈற்றடி இரண்டும் இரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

     ‘குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட்
                                             குலைமேற் பாய,
     ‘அழலெரியின் மூழ்கினவால் அந்தோ! அளிய!’ என்
                                             றயல் வாழ் மந்தி
     கலுழ்வனபோல் நெஞ்சகைந்து கல்லருவி தூஉம்
     நிழல்வரை நன்னாடன் நீப்பனோ அல்லன்’.

 இது நான்கடியாய் ஈற்றடி இரண்டும் இரண்டு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

     ‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்
     உறவுற வருவழி உரைப்பன உரைப்பன்மின்
     செறிவுறும் எழிலினர் சிறந்தவர் இவர்நமக்
     கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்
     பிறபிற நிகழ்வன பின்’.

 இஃது ஐந்தடியாய், ஈற்றடி ஒன்று ஒரு சீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை.

[வேற்றொலி வெண்டுறை]

     ‘கல்லாதார் நல்லவையுட் கல்லேபோற் சென்றிருந்தாற்
                                             கருமம் யாதாம்?
     இல்லாதார் செல்வரைக்கண் டிணங்கியே ஏமுற்றால்
                                             இயைவ தென்னாம்?
     பொல்லாதார் நன்கலன்கள் மெய்புதையப் பூண்டாலும்
                                             பொலிவ தென்னாம்?