|
[நேரிசை ஆசிரியப்பா]
‘போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னுவோரே’.
என்பது ஏந்திசை அகவல் ஓசை.
[நேரிசை ஆசிரியப்பா]
‘அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே’.
என்பது தூங்கிசை அகவல் ஓசை.
[நேரிசை ஆசிரியப்பா]
‘குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர் புரையும் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் கணங்கே’.
என்பது ஒழுகிசை அகவல் ஓசை.
இன்னும் பிறவாற்றான் வருவன.
[நேரிசை ஆசிரியப்பா]
‘கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே;
எம்மில் அயல தேழில் உம்பர்
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே’. 11
இன்னவை பிறவும் தூங்கிசை அகவல் ஓசை எனப்படும்.
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘பொழிலே
இரவோ ரன்ன இருளிற் றாகியும்,
நிலவோ ரன்ன வெண்மணல் ஒழுகியும்,
அரைசுமணம் நயந்த பந்தர்ப் போலவும்,
1 குறுந். 138 பி - ம். 1 ஓர்ந்தே
|