|
வரைவாழ் இயக்கியர் உறைவிடம் போலவும்
வண்ணனை1 முற்றா தாகியும், ஒண்ணிழற்
பூவிரி நாற்றம் அன்றியும் ஏர்வரக்?
குங்குமம் கமழும் எங்கோன் வரையென5
வியந்தனள் இருந்து வீணை பண்ணி
நயந்த கீதம் பாடும் என்ப
வயந்த மாகிய பொழிலி னானே.
இன்னவை பிறவும் ஏந்திசை அகவல் ஓசை எனப்படும்.
[நூற்பா]
‘இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
தமிழியல் வரைப்பின் தானினிது விளங்கி
யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோ
டிழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே’.
எனவும்,
‘முழுதுல கிறைஞ்ச முற்றொருங் குணர்ந்தோன்’.1
எனவும் இன்னவை எல்லாம் நூற்பா அகவல் ஓசையாய், ஒழுகிசை அகவல்
ஓசை எனப்படும்.
இவை ‘ஏ’ என்று இற்றவாறு கண்டு கொள்க.
[நேரிசை ஆசிரியப்பா]
‘பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவள்
ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெரும! நிற் றகைக்குநர் யாரோ’.2
இஃது ‘ஓ’ என்று இற்ற ஆசிரியம்.
‘குவளை உண்கண் இவள்வயிற் பிரிந்து
பெருந்தோள் கதுப்பொடு விரும்பினை நீவி
இரங்குமென் றழுங்கல் வேண்டா
செழுந்தேர் ஓட்டிய வென்றியொடு சென்றீ.
இஃது ‘ஈ’ என்று இற்ற ஆசிரியம்.
யா. வி. பாயிரம். 2. அகம். 46
பி - ம். 1 வண்ணம் ? மேவாக் 5 ஏனுங்கொன் மற்றென.
|