|
‘முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்ப தெவன்கொல் அன்னாய்!1
இஃது ‘ஆய்’ என்று இற்ற ஆசிரியம்.
[நிலைமண்டில ஆசிரியப்பா]
‘அலந்த மஞ்ஞை யாமம் கூவப்
புலர்ந்தது மாதோ புரவலற் கிரவென்’.2
இன்னவை பிறவும் உதயணன் கதையின்கண் ‘என்’ என்று இற்ற ஆசிரியம்
எனக் கொள்க.
[நேரிசை ஆசிரியப்பா]
‘நின்றன நின்று தன்றுணை ஒருசிறைப்
பூந்தண் சிலம்பன் ‘தேந்தழை இவை’ எனக்
காட்டவும் காண்டல் செல்லாள் கோட்டிப்
பூண்முலை நோக்கி இறைஞ்சி
வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை’.
இஃது ‘ஐ’ என்று இற்ற ஆசிரியம்.
‘என்’ என்னும் அசைச்சொல் ஆசிரியத்துள் அருகியன்றி வாராது,
வரினும் சிறப்பிலது எனக் கொள்க.
‘தன்பால் உறுப்புத் தழுவிய மெல்லிய
இன்பா அகவல் இசையதை இன்னுயிர்க்
கன்பா வறைந்த ஆசிரியம் என்ப’.
என்று ஓசை சொல்லி,
‘ஏயெனச் சொல்லின் ஆசிரியம் இறுமே;
ஓஆய் என1 ஒரோவழி ஆகும்’
‘என்னென் சொல்லும் பிறவும் ஒன்றித்?
துன்னவும் பெறூஉம் நிலைமண் டிலமே’,
என்று ஈறு சொன்னார் அவிநயனார்.
‘இயற்சீர்த் தாகியும், அயற்சீர் விரவியும்,
தன்றளை தழுவியும், பிறதளை தட்டும்,
அகவல் ஓசைய தாசிரி யம்மே’.
1. ஐங்குறு 21. 2. பெருங்கதை. 1 54:144-5
பி - ம். 1 ஓஆஈஐயும் ? பிறவு
|