|
என்று ஓசை சொல்லி,
‘ஏயென் றிறுவ தாசிரியத் தியல்பே;
ஓஆய் இறுதியும் உரியவா சிரியம்’.
‘நின்ற தாதி நிலைமண் டிலத்துள்
என்றும் என்னென் றிறுதிவரை வின்றே’.
‘அல்லா ஒற்றும் அகவலின் இறுதி
நில்லா அல்ல; நிற்பன வரையார்’.
என்று ஈறு சொன்னார் மயேச்சுரர்.
‘ஈ’ என்றும் ‘ஐ’ என்றும் இறும் என்று இவர்கள் சொற்றிலரால்’
எனின், இவர்களும் இலேசு எச்ச உம்மை விதப்புக்களால் உடம்பட்டார்;
இந்நூலுடையார் எடுத்து ஓதினார். இது வேற்றுமை.
‘அகவல் ஓசை ஆசிரி யம்மே’.
என்று பிறரும் சொன்னார் எனக் கொள்க.
70) ஆசிரியப்பாவின் பெயர் வேறுபாடு
‘நேரிசை இணைக்குறள் மண்டிலம் நிலைப்பெயர்
ஆகுமண் டிலமென் றகவல் நான்கே’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின் அகவல் ஓசையோடு
அளவடித்தாகியும், இயற்சீர் பயின்றும் அயற்சீர் விரவியும், தன் தளை
தழுவியும் பிற தளை மயங்கியும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் வாராது
அயற்பா அடி மயங்கியும் மயங் காதும், ஐஞ்சீர் அடியால் அருகி வரும்
என்றும், நாலெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ்
நிலமும் பெற்ற நாற்சீரடியால் நடைபெறும் என்றும் வேண்டப் பட்ட
ஆசிரியப்பாவினது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : நேரிசை ஆசிரியமும், இணைக்குறள் ஆசிரியமும்,
நிலைமண்டில ஆசிரியமும், அடிமறி மண்டில ஆசிரியமும் என
ஆசிரியப்பா நான்காகும் (என்றவாறு).
பி-ம். 3 மென்றிவற்
|