பக்கம் எண் :
 

 286                                   யாப்பருங்கல விருத்தி

72) (இணைக்குறள் ஆசிரியப்பா)

     இணைக்குறள் இடைபல குறைந்திறல1 இயல்பே.

     ‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், இணைக்குறள் ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள் : இணைக்குறள் - இணைக்குறள் ஆசிரியப்பா, இடை பல குறைந்து இறல் இயல்பே - ஈற்றடியின் மேலையடி இரண்டு சீரும் ஒரு சீரும் குறைந்து இறுதல் இயல்பு எனப்படும் (என்றவாறு).

     ‘ஈற்றடியின் மேலையடி’ என்பது அதிகாரம் வருவித்து உரைத்தது.

     ‘இயல்பே’ என்ற விதப்பால், முதலடியும் ஈற்றடியும் ஒழித்து ஏனையடி ஒரோவொன்று ஒரு சீரும் இரு சீரும் குறைந்து வரும் என்க.

     வரலாறு :

[இணைக்குறள் ஆசிரியப்பா]

     ‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
     சாரச் சார்ந்து
     தீரத் தீரும்
     சாரல் நாடன் கேண்மை,
     சாரச் சாரச் சார்ந்து,
     தீரத் தீரத் தீர்ப்பொல் லாதே’.1

 இது சிறப்புடை நேரொன்றாசிரியத் தளையான் வந்து, ஈற்றயலடி இரண்டும் முச்சீரான் வந்த இணைக்குறள் ஆசிரியப்பா.

     ‘இவனினும் இவனினும்? இவள்வருந் தினளே;
     இவளினும3dா வருந்தினன் இவனே;
     இவளைக் கொடுத்தோன் ஒருவனும் உளனே;
     தொடிக்கை பிடித்தோன் ஒருவனும் உளனே;
     நன்மலை நாடனும் உளனே;
     புன்னையங் கானற் சேர்ப்பனும் உளனே’.

 இது சிறப்புடை நிரையொன்றாசிரியத் தளையான் வந்த இணைக்குறள் ஆசிரியப்பா.


  1. இப்பாவில் ஒருசீர் குறைந்தமைக்கு ஈற்றயலடி யிரண்டும், இருசீர் குறைந்தமைக்கு ஏனைக் குறளடி இரண்டும் உதாரணமாகக் கொள்ளத் தகும்.
  பி - ம். 1 குறைந்திறின் ? இவளினும் இவளினும் 3 இவனினும்