|
‘கொன்றுவாழ்1 கொடிச்சியர் சீறூர் எடுத்த
அம்மெல் லாகத் தலரிவ னோனாது
நீங்கிய வண்ணமும் நீங்கிப் ?
பாங்கியற் றமரொடும் வந்து
தாங்கிய இன்பம் தணந்தனை பெரிதே’.
இது சிறப்பில் கலித்தளையான் வந்த இணைக்குறள் ஆசிரியப்பா.
‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே!
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தானிற்கு மன்னே
நரந்தம் நாறும் தன்கையாற்
புலவுநாறும் என்றலை தைவரு மன்னே!
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
அருநிறத் தியங்கிய வேலே;
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ!
இனி்ப் பாடுநரும் இல்லை;
பாடுந ருக்கொன் றீகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைகொள் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே’.1
இதனுள் இருசீர் அடியும் முச்சீரடியும் வந்தன, என்னை?
‘இடைபல குறைவ திணைக்குற ளாகும்’.
என்றார் அவிநயனார்.
1. புறம் 235 பி - ம். ? குன்றுவாழ் 1 நீங்கிய.
|