‘ஈற்றயல் குறைந்த நேரிசை; இணையாம்
ஏற்ற அடியின் இடைபல குறைந்தன’.
என்றார் மயேச்சுரர்.
‘அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்
குறளடி சிந்தடி என்றா யிரண்டும்
இடைவர நிற்ப திணைக்குறள் ஆகும்’.
என்றார் காக்கைபாடினியார்.
‘இடையிடை சீர்தபின் இணைக்குறள் ஆகும்’.
என்றார் சிறுகாக்கைபாடினியார்.
73) அடி மறி மண்டில ஆசிரியப்பா
மனப்படும் அடிமுத லாயிறின் மண்டிலம்
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், மண்டில ஆசிரியப்பா
ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: மனம் படும் அடி முதலாய் இறின் - யாதானும் -
மனப் பட்டது ஓர் அடி முதலாகச் சொல்லப்பட முடிவது, மண்டிலம் -
மண்டில ஆசிரியப்பா எனப்படும் (என்றவாறு).
வரலாறு :
[அடி மறி மண்டில ஆசிரியப்பா]
‘மாறாக் காதலர் மலைமறந் தனரே;
ஆறாக் கட்பனி வரலா னாவே;1
ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே;
கூறாய் தோழியாம் வாழு மாறே’.1
இது தன் சீர் நேர்த்தளையான் வந்த மண்டில ஆசிரியப்பா.
‘பூங்கட் குறுந்தொடி யாங்குற் றனளே?
புனல்சேர் ஊரன் பொதுமகன் அன்றோ?
ஏதில் மாக்கட் கெவனா கியரோ?
போதி பாண! நின் பொய்ம்மொழி எவனோ?’
இது சிறப்புடை இயற்சீர் வெண்டளையான் வந்த மண்டில ஆசிரியப்பா.
யா. வி. 95 உரைமேற்.
பி - ம். 1 கண்ணீர் வரலானாதே.
|