‘சூரல் பம்பிய சிறுகான் யாறே;
சூரா மகளிர் ஆரணங் கினரே;
வாரலை எனினே யானஞ் சுவலே;
சாரல் நாட! நீவர லாறே’.
இது சிறப்புடை ஆசிரிய நேர்த்தளையான் வந்த மண்டில ஆசிரியப்பா.
இவற்றை மனப்பட்டது ஓர் அடி முதலாக உச்சரித்து,
ஓசையும் பொருளும் பிழையாதவாறு கண்டு கொள்க.
என்னை?
‘உரைப்போர் குறிப்பின் உணர்வகை அன்றி1
இடைப்பால் முதலீ றென்றிவை தம்முள்
மதிக்கப் படாதது மண்டில யாப்பே’.
என்றார் காக்கைபாடினியார்
‘கொண்ட அடிமுத லாயொத் திறுவது
மண்டில யாப்பென வகுத்தனர் புலவர்’.
என்றார் சிறுகாக்கைபாடினியார்
‘கொண்ட அடிமுத லாயொத் திறுவது
ண்டிலம் ஒத்திறின் நிலைமண் டிலமே’.
என்றார் அவிநயனார்.
‘எவ்வடி யானும் முதனடு இறுதி
அவ்வடி பொருள்கொளின் மண்டில யாப்பே’.?
என்றார் மயேச்சுரர்.
அஃதேல் ‘அடிமுதலாய் வரின்’ என்னாது, ‘இறின்’ என்று
வெறுத்திசைப்பக் கூறியது என்னை?
நேரிசை, இணைக்குறள், நிலைமண்டில ஆசிரியங்கள் முதலும்
இறுதியும் ஒன்றி வந்தால், அவற்றை நேரிசை மண்டில ஆசிரியப்பா,
இணைக்குறள் மண்டில ஆசிரியப்பா, மண்டில ஆசிரியப்பா, நிலைமண்டில
ஆசிரியப்பா எனப் பெயரிட்டு வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது
அறிவித்தற்கு எனக் கொள்க. என்னை?
பி - ம். 1 இன்றி. ? மாகும்
|