பக்கம் எண் :
 

 290                                   யாப்பருங்கல விருத்தி

     ‘எழுவாய் இரட்டித் திறுதி ஒன்றாய்
     வரினது மண்டில ஆசிரி யம்மே’.

 என்றாராகலின்.

     வரலாறு:

     ‘முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
     மலையன் ஒள்வேற் கண்ணி
     முலையினம் வாராள1 முதுக்குறைந் தனளே’.1

 இது நேரிசை மண்டில ஆசிரியப்பா.

     பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

74) நிலைமண்டில ஆசிரியப்பா

     ‘ஒத்த அடியின ஆகியும் ஒற்றிற
     நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே’.

     ‘இஃது என் நுதலிற்றோ’ எனின், நிலைமண்டில ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள் : ஒத்த அடியின ஆகியும் - (நேரிசை, இணைக்குறள் போலாது) எல்லா அடியும் சீர் ஒத்து நின்றவாறே நின்று முடிவன ஆகியும், ஒற்று இற நிற்பவும் - அவ்வவற்று ஈற்றினும் யாதானும் ஓர் ஒற்றினையும் ஈறாக நிற்பனவும், என்னும் - ‘என்’ என்னும் அசைச் சொல் ஈறாக நிற்பனவும், நிலைமண்டிலமே - நிலைமண்டில ஆசிரியப்பா எனப்படும் (என்றவாறு).

     ‘நிற்பவும்’ என்ற உம்மையான், நூற்பா நிலை மண்டிலமும் பிறவும் ஏ, ஓ, ஈ, ஆ, ஐ என்னும் ஐந்து உயிரும் அல்லாப் பிற உயிரும் இசைவன எல்லாம் ஈறாகி வரப்பெறும் எனக் கொள்க.

     வரலாறு :

[நிலைமண்டில ஆசிரியப்பா]

     ‘வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
     சாரல் நாட! செவ்வியை ஆகுமதி;
     யாரஃ தறிந்திசி னோரே? சாரற்


  1 சிற்றெட்டகம். தமிழ்நெறி. பொருள். 22 மேற்., யா. வி. 32 உரைமேற்.
  பி - ம்.1 முலையும் வாரா.